பொய் செய்திகளை பரப்பாதீங்க… வரலட்சுமி சரத்குமார் காட்டம்!

Published On:

| By Manjula

Varalaxmi clarification about fake news

Varalaxmi clarification about fake news

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ‘போடா போடி’ படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமி தொடர்ந்து  ‘தாரை தப்பட்டை’, ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவிற்கும் மும்பையில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

தொடர்ந்து வரலட்சுமி சரத்குமாரின் தந்தையும், நடிகருமான சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜக-வுடன் இணைத்த செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Varalaxmi clarification about fake news

இதனையடுத்து போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் வரலட்சுமி இது குறித்து தற்போது தனது எக்ஸ் பக்கத்தில், “நமது ஊடகங்களில் பழைய போலி செய்திகளை பரப்புவதை விட வேறு எந்த செய்தியும் இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

பத்திரிகையாளர்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள், பிரபலங்களிடம் குறைகளை கண்டுபிடிப்பதை நிறுத்திவிட்டு, உண்மையான பத்திரிகை பணிகளை செய்ய வேண்டும்.

நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும் எங்கள் வேலையை செய்ய முயற்சிக்கிறோம். அதே போல் உங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்யக்கூடாது. Varalaxmi clarification about fake news

இங்கு பல முக்கியத்துவம் வாய்ந்த ஆயிரம் விஷயங்கள் உள்ளது. அதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எங்களது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Varalaxmi clarification about fake news

என்னைப் பற்றிய அவதூறுகள் தான் இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. பொய்யான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்”, என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இந்த பிரச்சனையின் மூல காரணம், கடந்த 2023 ஆம் ஆண்டு, வரலட்சுமி சரத்குமாரிடம் மேலாளராக பணியாற்றிய ஆதிலிங்கம் என்பவரை போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தது தான்.

அதோடு இந்த வழக்கு குறித்து வரலட்சுமியிடமும் விசாரணை நடத்த, என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் தனக்கு சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும் ஆதிலிங்கம் தன்னிடம் மிகக் குறைந்த காலமே பணியாற்றியதாகவும், ஒருவேளை விசாரணைக்கு அழைத்தால் நிச்சயம் ஒத்துழைப்பேன் என்றும் வரலட்சுமி தெரிவித்து இருக்கிறார்.

-கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“எடப்பாடி அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார்”: அண்ணாமலை தாக்கு!

AK 63: ‘கொல மாஸ்’ 22 ஆண்டுகளுக்கு பிறகு… அஜித் செய்த சம்பவம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel