விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் இன்று ( அக்டோபர் 9 ) மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கியது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
கடந்த 5 சீசனும் வெற்றிகரமாக ஒளிப்பரப்பான நிலையில், தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 6 வது சீசன் தொடங்கியுள்ளது.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த பின்னர் தான் அதில் உள்ள போட்டியாளர்களுக்கு சமூக வலைதளங்களில் ஆர்மி தொடங்கப்படும்.
ஆனால் இந்த முறை நிகழ்ச்சி தொடங்கும் போதே ஒரு போட்டியாளருக்கு ஆர்மியை தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது ஓவியா தான். ஏனெனில் இந்நிகழ்ச்சி மூலம் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா.
பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஓவியாவுக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு இணையான ரசிகர்கள் இருந்தனர்.
பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு முதலில் ட்விட்டரில் ஆர்மி தொடங்கப்பட்டது என்றால் அது ஓவியாவுக்கு தான். அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருந்தார் ஓவியா.
பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துவிட்டாலும் ஓவியாவை மிஞ்சும் அளவுக்கு இதுவரை எந்த ஒரு பெண் போட்டியாளருக்கும் வரவேற்பு கிடைத்ததில்லை என்பதே உண்மை.
ஓவியா ரசிகர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆர்மி டிரெண்டை அடுத்தடுத்த சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் பின்பற்றினர்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த பின்னர் தான் அதில் உள்ள போட்டியாளர்களுக்கு ட்விட்டரில் ஆர்மி தொடங்கப்படும்.
ஆனால் இந்த முறை நிகழ்ச்சி தொடங்கும் போதே ஒரு போட்டியாளருக்கு ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது.
அது யாரென்றால், ஜனனி என்கிற பெண் போட்டியாளருக்கு தான்.
இலங்கையை சேர்ந்த இவர், தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார்.
முன்னதாக இலங்கையை சேர்ந்த பெண் போட்டியாளரான லாஸ்லியா கடந்த 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
அவரைப் போல ஜனனியையும் தற்போதே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். அவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த சீசனில் டிக் டாக்கில் “செத்த பயலே, நார பயலே “ என்று பேசி பிரபலமான ஜி.பி.முத்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஸின் தம்பி மணிகண்டன்,
டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், விஜய் டிவி புகழ் அமுதவாணன், மியூசிக் ஆர்ட்டிஸ்ட் ஆர்யன், பிரபல மாடல் ராம் ரமசாமி, நிகழ்ச்சி தொகுப்பாளர் மகேஸ்வரி , கதிரவன்,
விக்ரமன் ,சின்னத்திரை நடிகர் முகமது அசீம், இசையமைப்பாளர் ஆசல் ,பிரபல மாடல் செரினா, நிவாசினி,திருநங்கை சிவின் கணேசன், சின்னத்திரை நடிகை ஆயிஷா,
ரச்சிதா, சாந்தி அரவிந்த் மற்றும் டிக்டாக் பிரபலம் தனலட்சுமி மற்றும் மாடல் கியூன்சி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நான் சாஃப்ட் ஆகிவிட்டேனா? கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி… அதுதான் என் நிலைமை : மு.க.ஸ்டாலின்