பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ க்ளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி பாராட்டியுள்ளார்.
’கல்கி 2898 AD’ திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், , தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக உருவாகிவருகிறது.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனின் முதல் தோற்றப் பார்வை வெளியானது. இதையடுத்து நேற்று (ஜூலை 21) நடிகர் பிரபாஸின் தோற்றம் வெளியானது.
இந்நிலையில், இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ள இயக்குநர் ராஜமவுலி படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாகி மற்றும் வைஜெயந்தி படங்கள் அருமை.
ஒரு உண்மையான எதிர்காலத் திரைப்படத்தை உருவாக்குவது மிகவும் கடினமான பணியாகும் நண்பர்களே அதை சாத்தியமாக்கியுள்ளீர்கள்.. பிரபாஸ் டார்லிங் உங்கள் லுக் அழகாக இருக்கிறது.
ஒரே ஒரு கேள்வி? படம் எப்போது திரைக்கு வரும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிரடியாய் குறைந்த தங்கம் விலை!
ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: அப்டேட் கொடுத்த படக்குழு!