பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்: ஆர்.ஆர்.ஆர் படக்குழு அதிர்ச்சி!

சினிமா

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ‘ரே ஸ்டீவன்சன்’ மறைவை அடுத்து இயக்குநர் ராஜமெளலி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் ரூ1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

மேலும் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் கடந்த மார்ச் மாதம் பெற்றது.

Actor Ray Stevenson dies

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ’சர் ஸ்காட்’ என்ற ஆங்கிலேய கவர்னர் வேடத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்ஸன் இறப்பு செய்தி அப்படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது இறப்புக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் பிபிசி தகவலின்படி இத்தாலிய தீவான இஷியாவில் படப்பிடிப்பின் போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 21ஆம் தேதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

வரும் 25ம் தேதி அவரது 59 வது பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு அவரது மரணம் நிகழ்ந்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Actor Ray Stevenson dies

இதுகுறித்து ஆர்.ஆர்.ஆர். பட இயக்குநர் ராஜமெளலி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ”ரே மரண செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அவர் தன்னுடைய ஆற்றலையும் துடிப்பையும் படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் கடத்தினார். அவருடன் பணிபுரிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் இப்போது அவரது மரணச் செய்தியை நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

அதே போல் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது பதிவில், “ரே ஸ்டீவன்சன் காலமானதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் சீக்கிரம் சென்றுவிட்டார். அவருடன் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

இந்த கடினமான நேரத்தில் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளது” என்று உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1964ஆம் ஆண்டு அயர்லாந்தின் லிஸ்பர்னில் பிறந்த ரே ஸ்டீவன்சன் தன்னுடைய 8 வயதில் இங்கிலாந்து சென்றார். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர், பின்னர் ஹாலிவுட் திரையுலகில் நுழைந்து தோர், வோல்ஸ்டாக் மற்றும் வரவிருக்கும் ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாட்கள் பயணம் ஏன்?: முதல்வர் விளக்கம்!

வீழ்ச்சியில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *