நடிகை ஸ்ரீ தேவி பிறந்த நாளான இன்று ( ஆகஸ்ட் 13 ) அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஸ்ரீ தேவி பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ், இந்தி சினிமாவை சில பத்தாண்டுகள் தன் நடிப்பின் கட்டுப்பாட்டிலும், கவர்ச்சியின் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்த ஸ்ரீதேவி, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி துபாயில் மரணமடைந்தார்.
இவரது மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில், ஸ்ரீ தேவியின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு பாலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகையும் , தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஸ்ரீ தேவியின் மகளுமான ஜான்வி கபூர் தன்னுடையை சமூக வலைதள பக்கத்தில் ,
”பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா , உன்னை நான் ஒவ்வொரு நாளும் அதிகமாக மிஸ் செய்கிறேன்.
எப்பொழுதும் உன்னை நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்