இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா – 2’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடவிருக்கிறார் என அப்படக்குழு அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படம் பல்வேறு மொழிகளில் வருகிற டிச.5ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், இத்தகைய அறிவிப்பை ஒரு போஸ்டருடன் அப்படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு நடிகைகளில் சமீபத்தில் வைரலாகி வரும் நடிகை ஸ்ரீலீலா. தனது அசாத்தியமான நடனத் திறமையால் இளம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் ஸ்ரீலீலா. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான நடிகர் மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் ‘குர்ச்சி மடட்டபெட்டி’ என்கிற பாடலில் மகேஷ் பாபுவுக்கு இணையாக அவர் ஆடிய ஆட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘புஷ்பா – 1’ திரைப்படத்தில் நடிகை சமந்தா ‘ஊ அண்டாவா’ என்கிற பாடலுக்கு ஆடி கேமியோ தந்தார். அந்தப் பாடலும் அப்போது பயங்கர வைரலானது. இதைத் தொடர்ந்து, இந்த ‘புஷ்பா – 2’ திரைப்படத்தில் அதே போன்ற ஒரு பாடலில் நடிகை ஸ்ரீலீலா ஆடி கேமியோ தரவுள்ளார். இந்தப் பாடலை நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா இயக்கியுள்ளார். இந்தப் பாடல் விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸும் விரைவில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டெல்லி கணேஷின் உதவும் உள்ளம்… யூடியூப்பரின் உருக்கமான பேஸ்புக் பதிவு!