டெல்லியில் ‘ஸ்பை’ டீசர் வெளியீடு!

சினிமா

புது டெல்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே மே 15ஆம் தேதியன்று நிகில் -கேரி பி ஹெச்- Ed எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஸ்பை’ எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது.

நடிகர் நிகில் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ஸ்பை’.

மறைக்கப்பட்ட இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாகக் கொண்டு, இதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

‘நீங்கள் எனக்கு ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்’ என சுபாஷ் சந்திர போஸின் வீர முழக்கம்… இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அண்மையில் வெளியிட்ட காணொளியில் இடம் பெற்றிருந்தது.

மே 15 ஆம் தேதியன்று கர்தவ்யா பாதையில் ஸ்பை படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது.

இந்த பாதையில் நடைபெறும் முதல் திரைப்பட டீஸர் வெளியிட்டு விழா இது என்பதால் சிறப்பு அடையாளத்தைப் பெற்றிருக்கிறது.

பிரபல பட தொகுப்பாளரான கேரி பி ஹெச்- இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படத்தில் நட்சத்திர நாயகன் நிகிலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனனும், இரண்டாவது நாயகியாகச் சானியா தாக்கூரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆரியன் ராஜேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

மேலும் அபிநவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு செங் குப்தா, நித்தின் மேத்தா, ரவி வர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங்,, சோனியா நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சரண் பக்கலா மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ஆக்க்ஷன் கலந்த த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் கதையைத் தயாரிப்பாளர் கே ராஜசேகர் ரெட்டி எழுதி இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.

இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இராமானுஜம்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ரிசல்ட்: தேர்ச்சி விகிதம் குறைவு!

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் நிதிஷ் குமார்: யார் இவர்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *