விக்ரம், ஹாங்காங்
சில நாட்களுக்கு முன்பு வெளியான மாதவன் நடித்த ராக்கெட்ரி : நம்பியின் கதை திரைப்படம் தமிழ் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று முதல் 7 நாட்களில் 24 கோடிக்கும் அதிகமான வசூலால் சாதனை புரிந்துள்ளது.
இந்த படக் கதையின் நிஜ நாயகன் நம்பி நாராயணன்.
யார் இந்த நம்பி நாராயணன்?
1994 ஆம் ஆண்டு அனைத்து பத்திரிக்கைகளிலும், உளவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட மாலத்தீவை சேர்ந்த மரியம் ரஷீதா மற்றும் பௌஸியா ஹசன் ஆகியோரிடம் இஸ்ரோவின் ராக்கெட் தொழில் நுட்பத்தை விற்றுவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு தலைப்பு செய்தியானவர் நாராயணன். இந்த செய்தி இந்தியாவில் அதிர்வலைகளை பல்வேறு இடங்களில் கிளப்பியது.
இஸ்ரோ அப்பொழுதுதான் சாதனைகளை நிகழ்த்தி உலகையே திரும்பி பார்க்க வைத்த அந்த நேரத்தில் இப்படி ஒரு தேசத் துரோக செயல் நடந்து இருக்கிறதே என்று நாடே உறைந்து போயிருந்தது.
யார் கண்பட்டதோ அதிகம் படித்த ஆர்ப்பாட்டமில்லாத அறிவு ஜீவியின் அமைதியான வாழ்க்கையில் தீராத பழிசொல்லும், அவப்பெயரும் புயலாக வந்து இப்படி ஆகி விட்டதே என்று அவரை நன்கு அறிந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள்.
சரி இந்த சர்ச்சையை அலசும் முன்பு அமைதியாய் வாழ்ந்த நம்பி நாராயணன் பற்றி பார்ப்போம்.
12 டிசம்பர் 1941 இன்றைய தமிழகத்திலும் அன்று திருவாங்கூர் சமஸ்தானத்தின் நகரமான நாகர்கோவிலில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 3 சகோதரிகள். நாகர்கோவில் DVD மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார்.
இவரின் ஆரம்ப கால வகுப்பு தோழர் இஸ்ரோவின் புகழ் பெற்ற விஞ்ஞானி ஒய்.எஸ். ராஜன் ஆவார். பொறியியல் இளநிலை பட்டப் படிப்பை மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் படித்தார். இந்த காலத்தில் அவரின் தந்தையை இழந்தார்.
அதை பற்றி அவர் கூறும் போது ” நான் 18 வயது சிறுவனாக இருந்தேன், ஒரு நோய்வாய்ப்பட்ட தாய் மற்றும் திருமணமாகாத இரண்டு சகோதரிகள் என என் கடினமான வாழ்க்கை தொடங்கியது. கல்வி கட்டணம் செலுத்தவும் மற்றும் குடும்பத்தின் செலவுகளுக்காகவும் நான் வெவ்வேறு நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்தேன். மற்ற மாணவர்கள் வீட்டிலிருந்து பணம் பெற்ற போது, நான் கொஞ்சம் பணத்தை வீட்டுக்கு அனுப்பினேன். எனக்கு எப்போதுமே மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது. அது என் தந்தையை இழந்தபோது என் தோள்களின் மீது சுமக்க வைக்கப்பட்டது. இந்த விஷயம் என் மீது படும் வரை நான் அதைத் தொடர்ந்தேன்” என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் நம்பி.
இது அவருக்கு மிகுந்த சோதனை நிறைந்த காலம், தந்தை இறந்த சில நாட்களிலேயே தாயையும் பறிகொடுத்தார். இந்த சோதனைகள் எல்லாம் நம்பியை சோர்வடைய வைக்கவில்லை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கல்வியில் முழு கவனம் செலுத்தி அதன் மேல் நம்பிக்கையும் வைத்து படித்தார்.
இளைப்பாற வாய்ப்பு கூட இல்லாமல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த உடனே ஒரு சர்க்கரை ஆலையில் சேர்ந்து சிலகாலம் பணியாற்றினார். 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் விக்ரம் சாராபாய் அவர்களை நேரில் சந்தித்தார் நம்பி.
அன்றைய காலத்தில் படித்த அறிவு ஜீவிகளை மட்டுமே தேடித் தேடி பணியில் சேர்த்தது இஸ்ரோ, அறிவாற்றலும் அடக்கமும் புத்திக்கூர்மையும் நிறைந்த நம்பியை பார்த்த உடனே சாராபாய்க்கு பிடித்துவிட்டது. திருவனந்தபுரம் அருகில் உள்ள மீனவ கிராமமான தும்பாவில் தொடங்கியிருந்த இஸ்ரோவின் (Thumba Equatorial Rocket Launching Station) தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் வேலை கிடைத்து பணியிலும் சேர்ந்தார்.
பின்னர் நாராயணன் தனது பள்ளித் தோழரும் விஞ்ஞானியுமான ஒய்.எஸ். ராஜனுடன் சேர்ந்து (Payload integrator) பேலோட் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் எம்.டெக். மேற்படிப்பு படிக்க பதிவு செய்தார். இதையறிந்த சாராபாய், நாராயணனுக்கு உதவும் வகையில் அவரின் உயர்கல்விக்கு விடுமுறை அளித்து ஊக்கமும் தந்தார்.
படிப்பில் படுசுட்டியான நம்பி 1969 இல் நாசாவிடமிருந்து Fellowship பெற்றார்,பின்னர் உலகின் தலை சிறந்த பேராசிரியர் லூய்கி க்ரோக்கோவின் தலைமையில் 10 மாதங்களில் நியூ ஜெர்சியின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் (Chemical Rocket Propulsion) கெமிக்கல் ராக்கெட் ப்ராபல்ஷனில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அவரின் திறமையையும் ஆற்றலையும் கண்டு வியந்த அமெரிக்கா, நாராயணனுக்கு அமெரிக்க குடியுரிமையும், நாசாவிடமிருந்து நல்ல வேலையும் வழங்கி அவரை அங்கயே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டது. திரவ உந்துவிசையில் நிபுணத்துவம் பெற்ற அவர் அதனை மறுத்து இந்தியாவுக்குத் திரும்பிய அந்த நேரத்தில், இந்திய ராக்கெட் தொழில்நுட்பம் இன்னும் (Solid Propulants) திட உந்துசக்திகளை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருந்தது.
இந்திய ராக்கெட் திட்டத்தில் திரவ உந்துவிசையின் தேவையை நாராயணன் கண்டறிந்து அதில் அவர் தலைமை தாங்கினார். 1970 களின் முற்பகுதியில், நமது முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் அவர்களின் குழு (SOLID MOTOR )திட மோட்டார்களில் பணிபுரிந்த போது, குறைந்த வெப்பநிலையில் பொருட்களின் உற்பத்தி ஆகும் (cryogenic ) கிரையோஜெனிக்ஸ் பிரிவின் தலைமை பொறுப்பில் இருந்தார் நம்பி நாராயணன். அவரின் தலைமையில் இயங்கும் பிரிவுக்கு அப்போதைய இஸ்ரோவின் தலைவர் சதீஷ் தவான் மற்றும் யு.ஆர். ராவ் ஆகியோரின் பெரும் ஆதரவு கிடைத்தது. இதனால் இந்தியாவில் முதல் (liquid fuel rocket technology) திரவ எரிபொருள் ராக்கெட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்.
1974 இல், Societe Europeenne de Propulsion இஸ்ரோவிடமிருந்து 100 (Man year) மனித ஆண்டு பொறியியல் பணிகளுக்கு ஈடாக வைக்கிங் இயந்திர தொழில்நுட்பத்தை மாற்ற ஒப்புக்கொண்டது. கடுமையாக உழைக்கும் நாராயணனும் அவரின் குழுவினரும் தங்களது பணியில் முழுமையாக ஈடுபட்டு, திரவ உந்து மோட்டார்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். கடின உழைப்பும் விடாமுயற்சியுடனும் அந்த 70களின் நடுப்பகுதியில் (Mid 70’s) சுமார் 600-கிலோகிராம் (1,300 பவுண்டுகள்) எடையுள்ள எஞ்சினை வெற்றிகரமாக உருவாக்கினார்கள், இதனை தொடர்ந்து எடை அதிகமுள்ள பெரிய இயந்திரங்களை உருவாக்குவதில் ஈடுபட்டார்கள்.
பெறப்பட்ட தொழில்நுட்பத்தில் இருந்து உருவாக்கப்பட்ட முதல் இயந்திரம் 1985 இல் டாக்டர் நம்பி நாராயணன் மற்றும் அவரது குழுவினரால் இஸ்ரோவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு, அதற்கு விகாஸ் என்றும் பெயரிடப்பட்டது. ஆரம்பகாலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட விகாஸ் என்ஜின்கள் பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது.
பின்னர் அவை உள்நாட்டிலேயே கிடைக்கும் இணையான பொருட்களை வைத்து பயன்படுத்தும் வகையில் நாராயணன் மற்றும் அவரின் குழுவினரால் மாற்றம் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது. இவை PSLV மற்றும் GSLV தொடரின் ஏவுகணைகளை விண்வெளியில் ஏவ பயன்படுத்தப்படுகிறது. PSLVயின் stage 2வை உயர்த்தவும், GSLV Mark 1 மற்றும் Mark 1 இன் stage 2 மற்றும் GSLV Mark 3 இன் முக்கிய கட்டத்தை இயக்கவும் விகாஸ் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
எல்லாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது 1992 ஆம் ஆண்டில், கிரையோஜெனிக் எரிபொருளை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை பெறுவதற்காக , இந்தியா ரஷ்யாவுடன் ₹235 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் சர்வதேச விண்வெளி அரங்கில் ஆச்சர்யத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்தியா சர்வதேச விண்வெளி குழுவில் இணைவதை வல்லாதிக்க நாடுகள் விரும்பவில்லை முக்கியமாக அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியா கிரையோஜெனிக் இன்ஜின் திசையில் செல்வதை விரும்பவில்லை வெளிப்படையாகவே தங்களின் அதிருப்தியையும்
எதிர்ப்பையும் காட்ட தொடங்கின .
அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ் ரஷ்யாவிற்கு இது தொடர்பாக நேரடியாகவே ஒரு கடிதத்தை எழுதினார். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்பினார். மேலும் மீறி வழங்கினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நாடுகளின் விண்வெளி கிளப்பில் இருந்து நீக்கி ரஷ்யாவை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் போவதாக நேரடியாகவே மிரட்டினார்.
மேலும் இதே தொழில் நுட்பத்தை ₹950 கோடிக்கு அமெரிக்காவும், ₹650 கோடிக்கு பிரான்ஸும் தாங்கள் வாங்கிக் கொள்வதாகவும் சூழ்ச்சி வலை விரித்தன.இதற்குப் பிறகு, போரிஸ் யெல்ட்சின் தலைமையிலான ரஷ்யா அமெரிக்காவின் அழுத்தத்திற்கு உட்பட்டு இந்தியாவுக்கு தொழில்நுட்பத்தை வழங்க மறுத்தது.
இந்த ஏகபோகத்தை முறியடிக்கும் வகையில், பல ஆண்டுகளாகவே ரஷ்யாவும் , இந்தியாவும் சிறந்த நண்பர்களாக இருந்து வரும் காரணத்தால், இரு நாட்டு அதிகாரிகளிடையே நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையின் பயனாக ரஷ்யா இதற்கு மீண்டும் ஒப்புக்கொண்டு நான்கு கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிப்பதற்கான புதிய ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மூலம் $9 மில்லியன் மதிப்புடைய இயந்திரங்களை முதற் கட்டமாகத் தயாரிப்பதற்கான மலிவான விலையினை கொடுத்தது, கேரளா ஹைடெக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் இந்த டெண்டரைப் பெற்றது.
இந்த நிலையில் தான் 1994ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி மாலத்தீவை சேர்ந்த மரியம் ரஷீதா விசா காலத்தை மீறி தங்கிய குற்றச்சாட்டில் முதலில் கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 13ஆம் தேதி மாலத்தீவின் தலைநகரான மாலேயில் இருந்து உளவு பார்த்ததற்காக, வங்கிப் பணியாளரான ஃபௌஸியா ஹாசனையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். நண்பர்களான இருவரும் உளவாளிகளாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.
விசாரணையில் ஹோட்டல் அறையில் இருந்து இஸ்ரோவின் சுகுமாரனை தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு நவம்பர் 21 தேதி சுகுமாரன் கைது செய்யப்பட்டார். அவர் நம்பியின் அடுத்த நிலையில் இருந்து வந்தவர். இதனை தொடர்ந்து இஸ்ரோவின் ராக்கெட் தொழில் நுட்பத்தை விற்றுவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு , துறையின் தலைவரான நம்பி நாராயணன் நவம்பர் 30 தேதி கைது செய்யப்பட்டார்.
நம்பியும், சுகுமாரனும், உளவு பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த 2 மாலத்தீவுப் பெண்கள் விரித்த Honeycomb எனப்படும் அருவருக்கத்தக்க பாலியல் சதி வலையில் விழுந்து, தேசிய ரகசியமாகக் கருதப்படும் பல ஆவணங்களை அவர்களிடம் கொடுத்ததாக கேரள காவல்துறை எழுதிய திரைக்கதையில் வரும் குற்றச்சாட்டு.
இந்த ஆவணங்களில் இஸ்ரோவின் விகாஸ் என்ஜின் வரைபடங்கள், இந்தியா உருவாக்கிய கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள் உள்ளிட்டவை அடங்கும். கதை இதோடு முடிவதில்லை, இந்தத் தகவல்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த அணு விஞ்ஞானி ஒருவருக்குக் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு லட்சக்கணக்கான அமெரிக்க டாலர்களை வழங்கியதாகவும் போலீஸார் பொய்யாக குற்றம் சாட்டினார்கள்.
இந்த நால்வர் கைதுகளைத் தவிர, ரஷ்ய விண்வெளி நிறுவனமான Glavkosmosன் இந்தியப் பிரதிநிதி கே சந்திரசேகர் மற்றும் எஸ்கே சர்மா என்ற தொழிலாளர் ஒப்பந்ததாரர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த மோசடி கைதை பயன்படுத்தி, கேரளாவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள், அப்போதைய முதல்வர் கே கருணாகரன், அப்போதைய தென்மண்டல ஐஜி ராமன் ஸ்ரீவஸ்தவா உட்பட பலரை குறிவைத்து தாக்க துவங்கினர். முதல்வர் கே.கருணாகரனுக்கு மிக நெருக்கமானவர் என்று கருதப்பட்ட ஐஜி ராமன் ஸ்ரீவஸ்தவாவை தனது விசா நீட்டிப்புக்காக மரியம் நேரடியாக சந்தித்தார். இதனால் ஒரு அரசியல் சுனாமியே கேரளாவில் அந்த சமயத்தில் நடந்தது.
இந்த செய்தி வெளிவந்தவுடன் நம்பியின் மீதும் அவரின் குடும்பத்தின் மீதும் தங்களின் கட்டுக்கதையையும் கற்பனையையும் கட்டவிழ்த்துவிட்டது காவல்துறையும் பத்திரிக்கை ஊடகத் துறையும். இதனை நம்பிய வன்முறை கும்பல்கள் அவர்களை தீயிட்டு கொளுத்தவும் முயன்றார்கள். நம்பியும் அவரின் குடும்பமும் பழிசொல்லாலும் அவமானத்தாலும் கூனிக் குறுகிப் போனார்கள்.
உதவிக்கு கூட ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு அவர்களின் குடும்பமே தள்ளப்பட்டது. வாழ்க்கை அவர்களை ஒரே நாளில் அநாதைகளாக ஆக்கிப் போட்டது. பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் நேரடியாக பேசும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்த நம்பியை விசாரணை அதிகாரிகளும் காவலர்களும் பூட்ஸ் காலால் எட்டி உதைத்து விசாரணை என்ற பெயரில் தாங்கள் ஜோடித்ததை ஒப்புக்கொள்ள சொல்லி துன்புறுத்தினர். வலிகளையும் போராட்டத்தையும் இளம் வயது முதலே அனுபவித்த நம்பி அதற்கு இணங்க மறுத்தார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற காவல் துறை சண்டாளர்களையும் பொறுக்கிகளையும் விசாரிக்கும் மூன்றாம் தர முறையில் நம்பியையும் துன்பப்படுத்தியது. ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற பரிந்துரை செய்தது.
பல்வேறு கட்ட சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக இரண்டு மாத சிறைவாசத்திற்குப் பிறகு, நம்பிக்கு ஜனவரி 1995 இல் ஜாமீன் வழங்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணை மே 1996 வரை நீடித்தது, சிபிஐ தனது 18 மாத விசாரணைக்குப் பிறகு, 104 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது, அதில் இந்த முழு வழக்கும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாமல் புனையப்பட்ட பொய்யான வழக்கு என்பதைக் கண்டறிந்தது, உறுதியும் செய்திருந்தது. இதனை அடுத்து சிபிஐ நீதிமன்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் விடுவித்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் பின்னாள் ஒரு சதி இருப்பதை உணர முடியும்
1)மரியம், ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் விஜயன் பாலியல் ரீதியாக முயன்றதாகவும், அதற்கு தான் மறுத்துவிட்டதாகவும், மேலும் அவர் மீது மற்றொரு மூத்த போலீஸ் அதிகாரி ராமன் ஸ்ரீவஸ்தவாவிடம் புகாரளிப்பதாக எச்சரித்ததாகவும் இதனாலேயே தன் மீது எரிச்சல் அடைந்து இப்படி ஒரு வழக்கை ஜோடித்ததாகவும் கூறினார்.
2)ராமன் ஸ்ரீவத்சவாவைப் பொறுத்தவரையில் , விசாரணைக்கு தலைமை தாங்கிய சிபி மேத்யூஸுடன் அவருக்கு கசப்பான உறவு இருந்ததாகவும், அதனால்தான் ஸ்ரீவத்சவா இந்த ஊழலில் சிக்கியதாகவும் பின்னர் கூறப்பட்டது.
3)இந்தியாவின் கிரையோஜெனிக் இன்ஜின் வளர்ச்சியை அழிக்க அமெரிக்க ஆதரவு சதியின் ஒரு பகுதியாக, தான் கைது செய்யப்பட்டதாக நம்பி நம்பினார்.
விஷயம் இத்துடன் முடிந்து விடவில்லை இந்த சர்ச்சைக்கு பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்தது, அடுத்து ஆட்சிக்கு வந்த இடதுசாரி கூட்டணி அரசு இந்த வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடும் செய்தது. ஆனால் மார்ச் 1998 இல் உச்ச நீதிமன்றத்தால், அரசாங்கத்தால் தொடரப்பட்ட இந்த வழக்கு முகாந்திரம் இல்லை என்று தள்ளுபடி செய்து ரத்தும் செய்யப்பட்டது.
1999ல் நம்பி, தனக்கு இழப்பீடு வழங்கவும், பொய்யான வழக்கை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரினார். ஆனால் இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், செப்டம்பர் 2012 இல், கேரள உயர்நீதிமன்றம் அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து,23 ஆக்டோபர் 2017 ல் வெளியான நம்பியின் சுய சரிதையான “Ormakalude Bhramanapatham” ஓர்மைகளுடே பிரமாணபாதம், பொய்யாக ஜோடிக்கப்பட்ட இந்த இஸ்ரோ உளவு வழக்கையும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூன்றாம் நிலை சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதையும் வெளிப்படுத்தியது.
2018 செப்டம்பரில், நம்பி துன்புறுத்தல் மற்றும் மனக் கொடுமைக்கு ஆளானதாகக் கூறி அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, இந்த வழக்கில் நம்பி மற்றும் பிறரை பொய்யாக சிக்கவைத்ததில் கேரள காவல்துறையின் பங்கு குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து கேரளாவின் அப்போதைய முதல்வர் பினராய் விஜயன் நம்பி நாராயணனை சந்தித்து 50 லட்சம் நஷ்ட ஈட்டை வழங்கினார். மேலும் நாராயணனின் இழந்த மரியாதைக்காகவும் அவர் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்துக்கும் இழப்பீடாக ₹1.3 கோடியை அவருக்கு வழங்க முடிவு செய்து வழங்கியது கேரள அரசு.
2018ல் அமைக்கப்பட்ட நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான விசாரணை குழு ஏப்ரல் 2021 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது, முழு வழக்கும் ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் விரிவான விசாரணைக்கும் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் சிபிஐ மறு விசாரணைக்கு உத்தரவிட்டது மற்றும் 2021 ஜூன் மாதம் கேரள காவல்துறை மற்றும் ஐபியின் 18 முன்னாள் அதிகாரிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.( இருப்பினும், வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.)
உழைப்பு, கெளரவம், மரியாதை, வாழ்க்கையை இழந்த நம்பி நாராயணனுக்கு 26 ஜனவரி 2019 அன்று இந்தியாவின் மூன்றாவது மிகவும் மதிப்புமிக்க விருதான பத்ம பூஷன் விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் கையால் வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. எத்தனை தான் ஆறுதலும் அங்கீகாரமும் சொன்னாலும் வந்த வருமானத்தையும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு தன் வாழ்கையையும் அர்ப்பணித்த கர்ம வீரரான நம்பிக்கு இவை எதுவும் ஈடாகாது. அவரும் அவரின் குடும்பமும் நமக்காக உழைத்து அடைந்ததை விட இழந்ததே அதிகம். அவர்களின் பாதம் தொட்டு மனசால் அழுவதும் அவர்களின் மன்னிப்பை கோருவது மட்டுமே நமக்கு நாம் தேடும் சிறிய பிராயச்சித்தம்.
சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கப்பல் கவிழ்ந்ததை போல துவண்டு போகும் மனிதர்கள், நம்பியின் கதையை சிறிது கேட்டாலே நிச்சயம் நம்பிக்கை பிறக்கும். அந்த நம்பிக்கையைத் தான், மாதவன் தன் நடிப்பால் ராக்கெட்ரி திரைப்படமாக 3 மொழிகளில் தந்துள்ளார்.