எஸ்.பி.பி பெயரில் சாலை… முதல்வருக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.பி மகன்!

Published On:

| By Selvam

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி நினைவு நாளான நேற்று (செப்டம்பர் 25) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதல் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எஸ்.பி.பி-யின் மகன் சரண் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்,

எஸ்.பி.பி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், “அப்பாவோட நினைவு நாள்ள அருமையான ஒரு விஷயம் நடந்துருக்கு. மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைஞ்சிருக்கு. காம்தார் நகர்ல அப்பா வசிச்ச தெருவுக்கு அப்பாவோட பேரு வைக்கணும்னு ரெண்டு நாளைக்கு முன்னால செக்ரட்டரியேட் போய் அமைச்சர்கள் சாமிநாதன், அன்பில் மகேஷ், உதயநிதி ஆகியோர் கிட்ட மனு கொடுத்திருந்தேன். சிம் சாரையும் மீட் பண்ணி மனு கொடுக்க நினைச்சிருந்தேன். ஆனா சார் ரொம்ப பிஸியா இருந்ததால அவரை சந்திக்க முடியலை.

கிட்டத்தட்ட 36 மணி நேரத்துல காம்தார் நகர் முதல் வீதிக்கு எஸ்.பி.பி சாலைன்னு பெயர் வச்ச உத்தரவு சி,எம் ஆபிஸ்ல இருந்து வந்தது ரொம்ப சந்தோஷமாயிருக்கு. இந்த தருணத்துல அமைச்சர்கள், சிஎம் அனைவருக்கும் எனது குடும்பத்தோட சார்பில் நன்றி தெரிவிச்சுக்குறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது. பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் முதலமைச்சருக்கு உரித்தாகட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை… அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அலர்ட்!

காலாண்டு விடுமுறை: நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… முழு விவரம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share