தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் படம்!

சினிமா

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன்.

இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்துள்ளார். இப்படத்தின் நடனத்தை சாண்டி மாஸ்டர் கையாள, ஸ்டண்டை ஃபயர் கார்த்தி மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் மணி சேகர் கூறியதாவது, 

”நான் இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் சினிமா பட்டறையில் பயின்ற மாணவன் என்பதாலே படங்களை புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.

இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம். நான் அதிக நேரம் ஸ்னூக்கர் விளையாட்டிற்காக  செலவழித்திருக்கிறேன். ஸ்னூக்கர் என்றாலே சூதாட்டம், அதிக பணம் வைத்து விளையாடக் கூடியது போன்ற பேச்சுக்கள் எழுகிறது.

உண்மையில் மற்ற விளையாட்டுக்களை போன்று  இதுவும் ஒரு விளையாட்டு.
இப்படம் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய வகையில் கதையையும் திரைக்கதையையும் வடிவமைத்துள்ளேன்.

ஒரு படம் என்றால் ஒரு ஜானரை மையமாக வைத்துக் கொண்டுதான் உருவாக்குவார்கள். இந்த படத்தில் ரசிகர்கள் அனைத்து விதமான ஜானர்களையும் அனுபவிக்கலாம்.

இதில் காதல், காமெடி, திரில்லர் போன்ற விஷயங்களை ரசிகர்கள் அனுபவிக்க முடியும்” என்றார்.

சஞ்ஜீவன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இராமானுஜம்

”பெண்கள் ‘ஓசி’ பயணத்தை புறக்கணிக்க வேண்டும்” : பிரேமலதா

ரவீந்திரநாத் தோட்டத்தில் இறந்த சிறுத்தை: இருவர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.