சமீபகாலமாக திரைத்துறை கலைஞர்கள் பற்றியும் அவர்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்தும் பின்னணி பாடகி சுசித்ரா தொடர்ந்து பேசி வருகிறார்.
குறிப்பாக பாடலாசிரியர் வைரமுத்து பற்றி சமீபத்தில் இவர் பேசியது, வைரலானது. மேலும் அதே பேட்டியில் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி பேசும்போது, “இயக்குநர் பாலசந்தர் சாகும் வரை காம உணர்வு மிக்கவராக இருந்தார். இவரை மாதிரியான ஆட்கள் எல்லாம் அப்படி தான் இருப்பார்கள்” என தெரிவித்தார்.
சுசித்ராவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும், இயக்குனர் பாலசந்தரை பற்றி இப்படியா பேசுவது என அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழ துவங்கி உள்ளன. இந்நிலையில் பாடகி சுசித்ராவிற்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் லியாகத் அலிகான் வெளியிட்ட அறிக்கையில் “செத்துப் போனவர்கள் சாமிக்கு சமம். அவர்களது குற்றம் குறைகளை விமர்சிக்காமல் தவிர்ப்பது ஒரு நாகரிகமான ஒழுக்கம். திரையுலகின் பெருமைக்குரிய ஒரு சாதனையாளரை குறை கூறி கொச்சைப்படுத்தி இருப்பது அநாகரிகத்தின் உச்சம்.
இது அவரது குடும்பத்தார்க்கு எவ்வளவு கொடிய வேதனை? தமிழ் திரையுலகிற்கு பெருமைகள் சேர்த்து, விருதுகள் பல வாங்கி, இளம் இயக்குநர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த பாலச்சந்தர் சாரை விமர்சித்த பாடகி சுசித்ராவை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தோனியின் சாதனையைச் சமன் செய்த ரிஷப் பந்த்
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிர்ப்பு… மநீம பொதுக்குழுவில் தீர்மானம்!