தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பு, விநியோகம், திரையரங்கம் இந்த மூன்று தரப்பினர் மட்டுமே பணத்தை முதலீடு செய்கின்றனர். இவர்கள் உறுப்பினர்களாக இருக்க கூடிய பல்வேறு சங்கங்களின் மெகா கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதன்படி நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகளை கட்டுப்படுத்த திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதால், அவருடைய புதிய திரைப்படங்களுக்கான பணிகளை தொடங்கும் முன்பு தங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
பல திரைப்படங்கள், திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கிக் கிடப்பதாகவும், அந்த நிலையை மாற்ற புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின் படப்பிடிப்புகளை ஆரம்பிக்கலாம் என்பதால், ஆகஸ்ட் 16ம் தேதிக்கு பிறகு புதிய திரைப்படங்களுக்கான படப்பிடிப்புக்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு தொடர்பான பணிகளை நிறுத்துவது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கை வெளியான பின்பு அதற்கு பதில் கூறும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல் நவம்பர் 1 ந்தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவதாக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், திரைத் தொழிலாளர்களை பாதிக்கும் தன்னிச்சையான இந்த முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும், நட்புறவு பாதிக்காமல் பிரச்சனைக்கு தீர்வு காண தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வர வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Paris olympics 2024: மனு பாக்கர் மீண்டும் பதக்கம் வெல்ல வாய்ப்பு… இன்றைய போட்டிகள் என்னென்ன?
ஹெல்த் டிப்ஸ்: வாய்வுப் பிரச்சினையால் அவதிப்படுபவரா நீங்கள்… இதோ அதற்கான தீர்வு?
பியூட்டி டிப்ஸ்: தலையில் எண்ணெய்ப்பசையை நீக்க உதவும் ஹோம் மேட் பேக்!
டாப் 10 நியூஸ் : பிரதமர் – தொழில்துறை சந்திப்பு முதல் மனுபாக்கர் பதக்க வேட்டை வரை!