ஜேசன் சஞ்சய் தன்னுடைய அறிமுக படத்தில் ஹீரோவாக நடிக்க, முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
கடந்த 2௦23-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி, ‘தளபதி’ விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என, லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கிட்டத்தட்ட 7 மாதங்கள் தாண்டியும் படத்தின் ஹீரோ குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. லைகா நிறுவனமும் படம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
இந்தநிலையில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயனை ஜேசன் சஞ்சய் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘அமரன்’, ‘SK 23 மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் அவரின் 25-வது படம், ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படம் என கைவசம் மொத்தமாக நான்கு படங்கள் இருக்கின்றன.
இதனால் அவர் ஜேசனுக்கு கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இல்லை கால்ஷீட் இல்லை என கையை விரித்து விடுவாரா? என்பது தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த புதிய அப்டேட்டுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், துருவ் விக்ரம் ஆகியோரிடம் ஜேசன் சஞ்சய் கதை சொன்னதாக தெரிகிறது. இதில் விஜய் சேதுபதி, துல்கர் இருவரும் கால்ஷீட் இல்லை என கைவிரித்து விட்டனர். துருவ் விக்ரமின் நிலைப்பாடு என்னவென்பது தெரியவில்லை.
தற்போது படத்தின் முழுக்கதையையும் சஞ்சய் எழுதி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பினை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை சிவகார்த்திகேயன் கால்ஷீட் அளிக்கவில்லை என்றால், துருவ் விக்ரமுடன் படப்பிடிப்பினை ஜேசன் சஞ்சய் துவங்கி விடுவார் எனவும் தகவல்கள் அடிபடுகின்றன.
எனவே லைகா நிறுவனமே படத்தின் ஹீரோ குறித்த அறிவிப்பினை வெளியிட்டு, இதுகுறித்த தகவல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே, ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
ஒருபுறம் அப்பா விஜய் தன்னுடைய படத்திற்கு இயக்குநர் தேட, மறுபுறம் மகன் சஞ்சய் அறிமுக படத்திற்கு ஹீரோ தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“நீங்கள் எப்படி நலமாக இருப்பீர்கள்?” : எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
SK: மிகப்பெரும் தொகைக்கு ‘விலை’ போன சிவகார்த்திகேயன் படம்