தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான செளந்தர்யா ரஜினிகாந்திற்கு நேற்று (செப்டம்பர் 11) ஆண் குழந்தை பிறந்தது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு, ஐஸ்வர்யா, செளந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்தார்.
இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
செளந்தர்யா ரஜினிகாந்த் 2010ஆம் ஆண்டு அஸ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். 2017ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த தம்பதிகளுக்கு வேத் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு விசாகன் என்பவரை செளந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு நேற்று (செப்டம்பர் 11) ஆண் குழந்தை பிறந்தது. இதனை செளந்தர்யா ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“கடவுளின் அளவில்லா அருளாலும், எங்கள் பெற்றோரின் ஆசியாலும், விசாகனும், வேத்தும், நானும், வேத்தின் இளைய சகோதரர் ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை’ வரவேற்கிறோம்.
எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனால் நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக தாத்தாவாகியுள்ளார். திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் செளந்தர்யா ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
பொன்னியின் செல்வன் : நிறைவேறாத ஜெயலலிதா விருப்பம், ரஜினிகாந்த் ஆசை!