ரசிகர்களை அழவைக்க போகும் வாரிசு பாடல்!

சினிமா

Soul Of Varisu பாடலை நீங்கள் கேட்ட பின்பு நிச்சயமாக உங்கள் அம்மாவை அழைப்பீர்கள் என்று இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வம்சி இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே வாரிசு திரைப்படத்திலிருந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே, தீ தளபதி பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தநிலையில், வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடலான Soul Of Varisu It’s for u amma என்ற பாடல் இன்று (டிசம்பர் 20) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த பாடல் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அவரது அம்மா மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் Soul Of Varisu பாடல் குறித்து இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “விஜய் அண்ணாவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான நாளாக இருக்கப்போகிறது. Soul Of Varisu பாடலை நீங்கள் கேட்ட பின்பு நிச்சயமாக உங்கள் அம்மாவை அழைப்பீர்கள். பாடலாசிரியர் விவேக் அவரது வரிகளால் என்னை பல முறை அழச்செய்து என் கண்களை ஈரமாக்கினார். இயக்குனர் வம்சிக்கு எனது அன்பை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

செல்வம்

அர்ஜென்டினா வெற்றி: உருகிய மெஸ்ஸி மனைவி

அடுத்த 3 மணி நேரத்தில் மழை..மீனவர்களுக்கு எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.