படம் வெளியீட்டுக்கு முன்பே ஐஷ்வர்யா ராஜேஷ் படம் லாபம் ஈட்டியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் கதையின் நாயகியாக நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அவரது நடிப்பில் கதை நாயகியாக நடித்து முடித்துள்ள ‘சொப்பன சுந்தரி’ எல்லா தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.
இப்படத்தில் லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைக்க. சார்லஸ் இயக்கியுள்ளார்.
குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தணிக்கையில் யு சான்று பெற்றுள்ள இப்படம் ஏப்ரல் 14 அன்று வெளியாகவுள்ளது.
அதற்கு முன்பாகவே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி 1.50 கோடி ரூபாய்க்கும், ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் நான்கு கோடி ரூபாய்க்கும் பெற்றிருக்கிறது. ஆக மொத்தம் ஐந்தரை கோடி ரூபாய்க்கு படம் வெளியீட்டுக்கு முன்பாக வியாபாரம் நடந்திருக்கிறது.
இதனால் இப்படம் வெளியீட்டுக்கு முன்பே லாபத்தை அடைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள் திரைத்துறை வட்டாரத்தில்.
இதற்கு முன்பு ஐஸ்வர்யாராஜேஷ் நடித்த டிரைவர்ஜமுனா படம் திரையரங்கில் கல்லாக் கட்டாத சூழலில் தொலைக்காட்சி மற்றும் இணையஒளிபரப்பு உரிமையில் பெருந்தொகைக்கு வியாபாரம் நடைபெற்று அந்தப்படத் தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்