வெற்றிமாறனின் விடுதலை : வசூல் எவ்வளவு?

சினிமா

வெற்றிமாறன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் விடுதலை. கடந்த இரண்டரை வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம்.

வணிக சினிமாவின் அடையாளம் வெற்றிமாறன் என அவரது குருநாதர் இயக்குநர் பாலுமகேந்திராவால் அடையாளப்படுத்தப்பட்டவர். இதுவரை இவர் இயக்கிய எல்லாப்படங்களிலும் நடிகர் தனுஷ் தான் கதாநாயகன்.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெகாமெடி நடிகராக பார்வையாளர்களுக்கு பரிட்சயமான சூரி கதைநாயகன், கெளரவ வேடத்தில் விஜய்சேதுபதி இசை இளையராஜா, ஒளிப்பதிவு வேல்ராஜ் என அறிவிப்பு வெளியானபோது தமிழ் சினிமா வட்டாரம் அதிர்ந்துதான் போனது.

அவரை கடந்து முதன்முறையாக காமெடி நடிகராக பார்வையாளர்களுக்கு பரிட்சயமான சூரி கதைநாயகன், கெளரவ வேடத்தில் விஜய்சேதுபதி இசை இளையராஜா, ஒளிப்பதிவு வேல்ராஜ் என அறிவிப்பு வெளியானபோது தமிழ் சினிமா வட்டாரம் அதிர்ந்துதான் போனது.

நான்கு கோடி ரூபாய் பட்ஜெட் நாற்பதுநாள் படப்பிடிப்பு என்று தொடங்கப்பட்ட படம் நாற்பதுகோடி ரூபாய் செலவானதற்கு பின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.

வெற்றிமாறன் – இளையராஜா முதல் முறை கூட்டணி அது மட்டுமே படத்திற்கான வணிக மதிப்பை தீர்மானிக்கும் என்கிற நிலையில் புதிது புதிதாக இயக்குநர் கவுதம்மேனன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் என நடிகர்கள் படத்தில் இணைக்கப்பட்டனர்.

இதனால் படத்தின் வணிக மதிப்பு அதிகரித்ததுடன், எதிர்பார்ப்பும் எகிறியது. இந்த நிலையில் முதலீட்டை திரும்பவும் எடுக்க விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடுவது என்கிற அறிவிப்பு வெளியான பின்பே படத்தின் தயாரிப்பாளர் நிம்மதி பெருமூச்சு விட்டாராம்.

viduthalai movie collection report

படம் வெளியாவதற்கு முன்பே வெற்றி மாறன் படங்களுக்குஇருக்கும் சர்வதேச வரவேற்பு, வணிகம் இவற்றை கணக்கில் கொண்டு விடுதலை படத்தின் இரண்டு பாகங்களின் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமையை தனியார் தொலைக்காட்சி ஒன்று சுமார் 45 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

தமிழ்நாடு விநியோக உரிமை படம் அறிவிக்கப்பட்டபோதே ரெட் ஜெயண்ட் வசம் வழங்கப்பட்டது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை சினிமா ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், பொதுவெளியிலும் ஏற்படுத்திய விடுதலை – 1 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே 70%-30% என்கிற சதவீத அடிப்படையில் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்படும். சூரி கதைநாயகனாக நடித்துள்ள படம் தானே 50% -50% அடிப்படையில் படத்திற்கு ஒப்பந்தம் போடலாம் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வழக்கம்போல ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் 70%-30% என்கிற அடிப்படையில் விடுதலை படத்தை திரையிட திரையரங்குகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே தமிழ்நாட்டில் கௌரவமான வசூல் விடுதலை – 1 படத்திற்கு கிடைத்துள்ளது என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில்.

விடுதலை படம் படைப்புரீதியாக திரையுலக கலைஞர்கள், தொழில்ரீதியான யூடியூப் விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்குரிய ஓபனிங், வசூல் நகர்புறங்களை கடந்து புறநகர்களில் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகளில் இல்லை என்பதே களநிலவரமாக உள்ளது.

படத்தின் புரமோஷன் விளம்பரங்களில் விஜய்சேதுபதி, அதிகாரவர்க்கம், அரசு எந்திரங்களுக்கு எதிராக பேசும் வசன காட்சிகள் ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டன.

விஜய்சேதுபதியை எதிர்பார்த்து வரும் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. படம் முடிகிற இறுதிக் காட்சியிலேதான் முழுமையாக விஜய்சேதுபதி தோன்றுகிறார்.

இதனால் தொடர்ச்சியாக விஜய்சேதுபதி ரசிகர்கள் படம் பார்க்க வருவார்களா என்கிற அச்சம் தியேட்டர் வட்டாரங்களில் நிலவுகிறது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது விடுதலை திரைப்படம்.

இராமானுஜம்

ராமேசுவரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல்: எ.வ.வேலு

ரூ.215.80 கோடியில் ஆற்றுப்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு

+1
2
+1
2
+1
0
+1
8
+1
1
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *