கடந்த வருடம் வெளியான விடுதலை படம் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
முதன்முறையாக கதையின் நாயகனாக இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்கள் சூரியை கொண்டாடினார்கள். விடுதலை 1 படத்திற்கு பின் விடுதலை 2, பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஓர் படம் என தொடர்ந்து சூரி ஹீரோவாக நடித்து வருகிறார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்திற்கு கருடன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இன்று ( ஜனவரி 19) மாலை 5 மணிக்கு துரை செந்தில் குமார் – சூரி கூட்டணியில் உருவாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் Glimpse வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது இந்த Title Glimpse வீடியோ மூலம் இந்த படத்தின் பெயர் “கருடன்” என்பது உறுதியாகிவிட்டது.
சசிகுமார், உண்ணி முகுந்தன், சமுத்திரகனி, ரேவதி ஷர்மா, ரோஹிணி ஹரிப்ரியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சசி குமார் மற்றும் உண்ணி முகுந்தன் ஆகிய இருவருக்கும் மிகவும் விசுவாசமான அடியாளாக சூரி இருக்கிறார் என்பதை விளக்கம் வகையில் இந்த Glimpse வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குனர் வெற்றி மாறன் கதை எழுதியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபில்ம் கம்பெனி ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.
துரை செந்தில்குமாரின் எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் கருடன் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை உயர்மட்டசாலை பணி: ஸ்டாலின் துவக்கி வைத்தார்!
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!