சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 தேசிய விருதுகளை சூரரைப் போற்று குவித்துள்ளது.
2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஜூலை 22) அறிவிக்கப்பட்டுள்ளது . இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான இது சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழின் சிறந்த தமிழ் திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தை இயக்குனர் வசந்த் இயக்கியுள்ளார்.
சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்திற்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
சிறந்த படத்துக்கான விருதையும் சூரரைப் போற்று பெற்றுள்ளது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூரரைப் போற்று படத்திற்காக சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்கான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், சிறந்த நடிகைக்கான விருது சூரரைப் போற்று அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த வசனத்திற்கான விருது மண்டேலா படத்திற்காக மடோன் அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது சிறந்த அறிமுக இயக்குநர் விருது மண்டேலா படத்துக்காக மடோன் அஷ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 விருதுகளை சூரரைப் போற்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
–க.சீனிவாசன்