இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் ’மிர்ச்சி’ சிவா நடித்து உருவாகியுள்ள ‘சூது கவ்வும் – 2: நாடும் நாட்டு மக்களும்’ படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நலன் குமாராசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து 2013ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகமான இந்தத் திரைப்படம் பல மாதங்களுக்கு முன்னரே ரிலீஸுக்குத் தயாரானது.
ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தில் ரிலீஸ் தள்ளிப் போக, தற்போது வருகிற டிசம்பர் மாதம் இந்தத் திரைப்படம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ’உங்கள் அனைவரையும் வருகிற டிசம்பர் மாதம் தியேட்டருக்குள் கடத்திச் செல்ல எங்கள் கேங் தயாராகியுள்ளது’ என்கிற கேப்சனுடன் படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்டு படத்தின் ரிலீஸை அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், காராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள் தாஸ், கல்கி, கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுனுடன் இணைந்து யோகராஜா இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.
2013ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் டார்க் காமெடி ஜானரி வெற்றிகரமாக கடத்திய முக்கியமான திரைப்படமாகும். அந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ஆணாற்.
பல ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான இந்த ‘சூது கவ்வும் – 2: நாடும் நாட்டு மக்களும்’ படத்திற்கு இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். கா ர்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்ய, இக்னேஷியஸ் அஸ்வின் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெய்ண்மெண்ட் உடன் இணைந்து தயாரிப்பாளர் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சிவகார்த்திகேயன் தந்த பரிசு! : ஜீவி பிரகாஷ் நெகிழ்ச்சி
’நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ : ட்ரெய்லர் வெளியானது!