“அவரை சந்திக்கக் காத்திருக்கிறேன்”: மறுமணம் குறித்து சோனியா அகர்வால்

சினிமா

நடிகை சோனியா அகர்வால் மறுமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

2003ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால்.

அதைத்தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, கோயில், மதுர, புதுப்பேட்டை, திருட்டு பயலே உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான அவர், முதல் பட இயக்குநரான செல்வராகவனை காதலித்து 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். செல்வராகவன் மறுமணம் செய்துகொண்ட நிலையில், இதுவரை சோனியா அகர்வால் மறுமணம் செய்துகொள்ள வில்லை.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு எஸ்பிபி சரணும், சோனியா அகர்வாலும் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.

அப்போது எஸ்பிபி சரண் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், எஸ்பிபி சரண், சோனியா அகர்வாலோடு நடிகை அஞ்சலி மற்றும் சந்தோஷ் ப்ரதாப் இருந்தனர்.

அந்த பதிவில் சரண் இண்டியன் வெப்சீரிஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இது வெப்சீரிஸ் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.
எனினும் எஸ்.பி.பி.சரண், சோனியா திருமணம் பற்றிய பேச்சுகள் மட்டும் தொடர்ந்து வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு நடிகை சோனியா அகர்வால் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது தனது மறுமணம், எஸ்பிபி உடனான புகைப்படம் குறித்து பேசிய அவர், “நாங்கள் அப்போது ஒரு சீரிஸ்க்காக ஷூட்டிங்கில் இருந்தோம். திருமண நாள் குறித்த காட்சி அது.

அப்போது இயக்குநர் போட்டோகிராபரிடம் அஞ்சலி, சந்தோஷ், எஸ்பிபி சரண், மற்றும் என்னை வைத்து புகைப்படம் எடுக்க சொன்னார். அந்த புகைப்படத்தைச் சரண் சார் தன்னுடைய மொபைலிலும் உதவியாளரிடம் சொல்லி எடுத்தார். அந்த ப்ரேமில் மொத்தம் 4 பேர் இருப்போம்.

ஆனால் அவர் புகைப்படத்தை க்ராப் செய்து நாங்கள் இருவர் மட்டும் இருப்பது போல் பதிவு செய்தார். அப்போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. எல்லோரும் எனக்கு போன் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களிடம் இல்லை என மறுப்புத் தெரிவித்தேன்” என்றார்.

மறுமணம் குறித்து பேசிய அவர், “மறுமணம் செய்துகொள்வதற்கான ஒரு சிறந்த நபரை நான் இதுவரை பார்க்கவில்லை.

பொருத்தமானவரைச் சந்திக்கும் போது திருமணம் நடக்கலாம். அந்த நபருக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.

பிரியா

ஹிண்டன்பெர்க் அறிக்கை: மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்கு!

மாற்றுத்திறனாளிகள் புணர்வாழ்வு மையம்: திறந்து வைத்த முதல்வர்

+1
0
+1
2
+1
1
+1
7
+1
1
+1
7
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *