பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் சோபிதாதுலிபாலா. இவர் ‘த நைட் மேனேஜர்’ என்ற தொடரில் நடித்ததன் மூலம் தற்போது விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.
வலைதளங்களில் ஒளிபரப்பப்படும் தொடர்களுக்கு எந்த ஒரு தணிக்கை சான்றிதழும் தேவையில்லை.
அதனால், அவற்றில் அதிகமான படுக்கையறைக் காட்சிகள், முத்தக் காட்சிகள், கெட்ட வார்த்தைகள், ஆபாச வசனங்கள் எந்தவித தடையும் இன்றி இடம்பெறுகின்றன .
திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் ஓடிடி வருகைக்கு முன்பு தொலைக்காட்சி தொடர்கள் நடிப்பது தொகுப்பாளினிகளாக பணியாற்றுவது என மாற்றம் கண்டார்கள்.
தற்போதைய கதாநாயகிகள் திரைவாழ்க்கை என்பதே சில வருடங்கள் என்பதால் 30 வயதிற்குள்ளாகவே வலைதள தொடர் தயாரிப்பாளர்களால் வளைக்கப்படுகின்றனர்.
சினிமாவை காட்டிலும் அதிகசம்பளம் தொடர்ச்சியாக வாய்ப்பு என்பதால் ஆடை குறைப்பில் எந்த எல்லைக்கும் தயாராக இருக்கின்றனர் இளம் நடிகைகள்.
அதனால் படுக்கையறை காட்சிகள், முத்தக்காட்சிகள் வலைதள தொடர்களில் சர்வசாதாரணமாகிவிட்டது.
அப்படி ஒரு வலைதள தொடரில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள சோபிதாதுலிபாலா முத்தம் கொடுத்து நடித்துள்ளது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘த நைட் மேனேஜர்’ தொடரில் முத்தக் காட்சிகள் நிறைய இடம் பெற்றுள்ளது குறித்து சமூக வலைத்தளங்களில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக ‘த நைட் மேனேஜர்’ தொடரில் அதன் கதாநாயகனாக நடிக்கும் 66 வயதான அனில் கபூருக்கு அவருடைய ஜோடியாக நடிக்கும் 30 வயதான சோபிதா துலிபாலா நிறைய முத்தங்கள் கொடுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடரில் அவர் அணிந்து வரும் ஆடைகள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒரு வயதான நடிகர், இளம் நடிகை சம்பந்தப்பட்ட காட்சிகளில் இவ்வளவு முத்தங்களைவைப்பதா என கண்டனங்களும் தெரிவித்து வருகிறார்கள்.
இராமானுஜம்