திருமண வாழ்க்கை: வதந்திகளுக்கு சினேகாவின் போட்டோ பதிலடி!

சினிமா

தமிழ் சினிமாவில் எவரும் எதிர்பாராத நிலையில் இணைந்தவர்கள் சினேகா- – பிரசன்னா ஜோடி.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான, ‘அச்சமின்றி அச்சமின்றி’ படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் சினேகா இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் உருவானது.

பின்னர் இருவருமே பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர்.

திரைப்பட வாய்ப்பு இல்லாத சினேகா,  விளம்பர படங்களில் நடிக்கிறார். டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக சினேகா – பிரசன்னா ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

Snehas photo response to rumours

இவற்றுக்கு ஒற்றை புகைப்படம் மூலம் பதில் தந்துள்ளார் சினேகா. தன்னுடைய கணவர் பிரசன்னாவின் கன்னத்தோடு கன்னம் வைத்து ஹாப்பி வீக் எண்டு என இவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தள தகவல்கள் பொய்யானவை என்று சொல்லாமல் சொல்லியுள்ளது.

நல்லா இருக்கணும் புன்னகை அரசி!

இராமானுஜம்

பிரியா மரணம்: மருத்துவமனை வாசலில்  போராட்டம்!

பிரியா குடும்பத்துக்கு 1 கோடி இழப்பீடு கேட்கும் எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
3
+1
1

Leave a Reply

Your email address will not be published.