வெளியானது ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் ஸ்னீக் பீக்!

சினிமா

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இன்று (ஏப்ரல் 5) வெளியாகியுள்ளது.

அண்மையில் வெளியான பத்து தல படத்தில், நடிகர் சிம்புவுடன் சேர்ந்து மாஸான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த, கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘ஆகஸ்ட் 16, 1947’ படம் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார். ‘ஆகஸ்ட் 16, 1947’ படம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றியும், தேசத்துக்காக போராடிய மக்களின் வாழ்க்கை குறித்து படமாக்கி காட்டியுள்ளார் இயக்குனர் என்.எஸ்.பொன்குமார்.

Sneak Peek of August 16 1947

இந்நிலையில், இப்படத்தில், ஸ்னீக் பீக் காட்சியில்… புகழ் காந்தியின் நடவடிக்கைக்கு வெள்ளைக்காரர்கள் அஞ்சுவதாக நாளிதழ் படிக்கிறார்… காந்தியை பார்த்து வெள்ளையர்கள் பயம் கொள்ள காரணம் என்ன என அவர்களுக்குள்ளேயே வெள்ளந்தியாக, பேசி கொள்ளும் காட்சி இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் ’ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

குளத்தில் மூழ்கி 5 பேர் பலி: தலைவர்கள் இரங்கல்!

மாரடைப்பால் உயிரிழந்த உடற்பயிற்சியாளர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *