பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனா சந்தோக்கே இன்று (ஜூலை 2) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தொகுப்பாளினி அர்ச்சனா
1985ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி அர்ச்சனா பிறந்தார். 90களில் இருந்து பிரபல தொகுப்பாளினியாக இருந்து வரும் அர்ச்சனா சந்தோக்கே, 1999ஆம் ஆண்டு அவரது கல்லூரி படிப்பின்போதே ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார்.
அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் “நகைச்சுவை நேரம்”, “இளமை புதுமை” போன்ற நிகழ்ச்சிகளை அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.
சில ஆண்டுகள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பல நிகழ்ச்சிகளுக்கு இவர் தொகுப்பாளினியாக இருந்தார். அர்ச்சனா 2004ஆம் ஆண்டு வினீத் முத்துக்கிருஷ்ணனை மணந்தார். இவர்களுக்கு சாரா வினீத் என்ற மகள் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சில காலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. பின்னர், 2009ஆம் ஆண்டு விஜய் டிவியில் சேர்ந்து 2013ஆம் ஆண்டு வரை “நம்ம வீட்டு கல்யாணம்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பின்னர் சிறு இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அதிர்ஷ்ட லட்சுமி”, “சரிகமப”, “ஜூனியர் சூப்பர் ஸ்டார்” போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஜீ தமிழில் ஒளிபரப்பான “சூப்பர் மாம்” என்ற நிகழ்ச்சியை தனது மகள் சாராவுடன் இணைந்து வழங்கினார்.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 4ல் வைல்டு கார்டு எண்ட்ரியில் மீண்டும் விஜய் டிவிக்குள் வந்தார் அர்ச்சனா. இதன் தொடர்ச்சியாக, விஜய் டிவியில், “காதலே காதலே”, “ஓல்ட் இஸ் கோல்ட்”, “நம்ம வீட்டு கல்யாணம் சினேகன் மற்றும் கனிஷ்கா ஸ்பெஷல்” போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்தார்.
முன்னதாக, “என் வழி தனி வழி”, “நான் சிரித்தால்”, “டாக்டர்’ உள்ளிட்ட சில படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் அர்ச்சனா நடித்துள்ளார்.
தற்போது, சினிமா பிரபலங்களை வைத்து நேர்காணல் எடுப்பது, திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் விழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பயங்கர பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 2) தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அர்ச்சனா சந்தோக்கேவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாமக பிரச்சார பேனரில் ஜெயலலிதா புகைப்படம் : நன்றி சொன்ன ஜெயக்குமார்
சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசிற்கு அன்புமணி வலியுறுத்தல்!