சமந்தாவுக்கு என்னாச்சு? சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்!

சினிமா

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு உட்பட பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அதிலும் கடந்த ஆண்டு ‘புஷ்பா’ படத்தில் ஆடிய ஒற்றை பாடலுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துவிட்டார்.

skin disease Samantha went abroad for treatment

இந்நிலையில், அதிக வெளிச்சத்தில் நடித்தால் வரக்கூடிய பாலிமார்பஸ் லைட் எரப்ஷன் என்ற தோல் நோயால் நடிகை சமந்தா அவதிப்படுவதாகவும் அதற்கான சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

skin disease Samantha went abroad for treatment

தற்போது சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வரும் நிலையில் பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.ஏற்கனவே நடிகை சமந்தா அஞ்சான் படப்பிடிப்பின் போது தோல் நோய் அவதியால் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆவின் பாலில் ஈ: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்!

இதனால்தான் தோற்றோம்: ரோகித் சர்மா

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.