நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது பட இயக்குநர் குறித்த, புதிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 21-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது.
22-வது படத்திற்கான இயக்குநர் யாரென்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் அவரின் அடுத்த 3 படங்களை இயக்கப்போவது யார்? என்பது குறித்த தகவல்கள் உறுதியாகி விட்டன. அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 23-வது படத்தில் நடிக்கிறார்.
தன்னுடைய 24-வது படத்திற்கு சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணையப்போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை, வெங்கட் பிரபு இயக்கப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயின் ‘GOAT’ படத்தினை இயக்கி வருகிறார். முதன்முறையாக விஜய்-வெங்கட் பிரபு இருவரும் இணைந்துள்ளதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக உள்ளது.
அதோடு விஜயின் அரசியல் என்ட்ரியும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பினை மேலும் பன்மடங்கு எகிறச்செய்துள்ளது.
விஜயின் ‘GOAT ‘ படத்தினை முடித்து விட்டு அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறாரா? இல்லை சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்க போகிறாரா? என்பது தெரியவில்லை.
தற்போதைய நிலவரப்படி சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இதுகுறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: ஆட்சியே போனாலும் பரவாயில்லை… அட்டாக் பாஜக… தயாரான ஸ்டாலின்
வேற லெவல் கூட்டணி: ராஜு முருகனின் அடுத்த ஹீரோ இவர்தான்!