சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘SK 23’படத்தில் மிருணாள் தாகூர் நடிக்காமல் போனதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
‘SK 23’ படத்தின் படப்பிடிப்பு காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியன்று தொடங்கியது. இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வாலும், முக்கிய வேடமொன்றில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் நடிக்க உள்ளனராம்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை குவித்த ‘சப்த சாகரடச்சே எல்லோ’ புகழ் ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். தற்காலிகமாக’SK 23′ என அழைக்கப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை சிவகார்த்திகேயன் பிறந்தநாளான நாளை (பிப்ரவரி 17) படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இயக்குநர் முருகதாஸ் இப்படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், ”நாங்கள் இந்த படத்திற்காக மிகவும் யதார்த்தமான இளம்பெண் ஒருவரை தேடிக்கொண்டிருந்தோம்.
அந்தவகையில் நான் ருக்மிணியின் படங்களை பார்த்தபோது அவரின் தோற்றம் மற்றும் நடிப்பு நான் எழுதிய கதைக்கு பொருத்தமாக இருப்பதை உணர்ந்தேன். அதனால் தான் இப்படத்திற்கு மிருணாள் தாகூரை விடுத்து ருக்மிணியை தேர்வு செய்தோம்,” என தெரிவித்து இருக்கிறார்.
இதனால் தென்னிந்திய கிரஷான மிருணாள் தாகூரின் தமிழ் என்ட்ரிக்காக, ரசிகர்கள் மேலும் காத்துக்கொண்டு இருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…