SJSuryah on board of telugu actor nani31

நானியை அச்சுறுத்தும் எஸ்.ஜே.சூர்யா

சினிமா

நேச்சுரல் ஸ்டார் என்று தெலுங்கு சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தசரா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

அந்த படத்திற்குப் பிறகு நடிகர் நானி “ஹாய் நான்னா” என்ற ஒரு புதிய படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் நானி, இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை டிடிவி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் டைட்டில் வெளியீடு மற்றும் பூஜை நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிகர் நானி, நஸ்ரியா நடித்து வெளியான “அண்டே சுந்தரனிகி” படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது‌.

Ante Sundaraniki is going to be fantastic: Nani

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மேலும் இந்தப் படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

ஏற்கனவே நடிகர் நானி நடிகை பிரியங்கா மோகன் இணைந்து நடித்த ‘கேங் லீடர்’ படம் பெரும் வெற்றி அடைந்தது.

தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் ஒரு ஸ்பெஷல் அப்டேட் என்னவென்றால் தொடர்ந்து பல படங்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இடம்பெற்று வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் நானியின் இந்த புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

ஸ்பைடர் படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடித்து தெலுங்கு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா,

தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் ஹீரோ கதாபாத்திரத்தையே மறந்து, வில்லன் கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் தனது அபாரமான நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது தெலுங்கிலும் மாஸ் காட்ட உள்ளார்.

கார்த்திக் ராஜா

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய உத்தரவு!

SAvsENG: 8 வருடங்களுக்கு பின்… இங்கிலாந்தின் படுதோல்வியை ரசித்த தென் ஆப்ரிக்கா!

 

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *