மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என தொடர்ந்து பல படங்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.
தமிழ் சினிமாவின் ‘நடிப்பு அரக்கன்’ என்று எஸ்.ஜே.சூர்யாவை அனைவரும் கொண்டாட தொடங்கிவிட்டனர். சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் எஸ்.ஜே.சூர்யாவை “இந்நாளின் திரையுலக நடிகவேள்” என்று புகழ்ந்து உள்ளார்.
மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தில் வில்லனாக நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த எஸ்.ஜே.சூர்யா தற்போது ராம் சரணின் கேம் சேஞ்சர், நானியின் சரிபோதா சனிவாரம் ஆகிய இரண்டு நேரடி தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது மலையாள திரையுலகில் அறிமுகமாக உள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் 251வது படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. ஜீபூம்பா படத்தை இயக்கிய ராகுல் ராமச்சந்திரன் தான் சுரேஷ் கோபியின் 251வது படத்தை இயக்குகிறார்.
இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ஜனவரி, பிப்ரவரியில் தென்மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து!
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமைச்சர் உறுதி!