sj surya says vishal

மார்க் ஆண்டனி: விஷாலுக்கு எஸ்.ஜே.சூர்யா வைத்த கோரிக்கை!

சினிமா

இன்னும் எத்தனை படங்கள் சேர்ந்து நடித்தாலும் நமக்குள் இருக்கும் அன்பான உறவு எப்போதும் இருக்க வேண்டும் என்று நடிகர் விஷாலிடம் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகனாக வேண்டும் என்று தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிய எஸ்.ஜே.சூர்யா அஜீத்குமார் கொடுத்த வாய்ப்பால் வாலி படத்தின் மூலம் இயக்குனராக மாறினார்.

sj surya says vishal

அந்தப் படத்தின் பெரும் வெற்றி விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படத்தை இயக்கும் வாய்ப்பை எஸ்.ஜே.சூர்யாவுக்கு பெற்று தந்தது. வெற்றிகரமான இயக்குனராக ஆன பின்பு அதனை தொடராமல் நியூ படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கி தயாரித்தார். முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இணையாக நியூ படம் வியாபாரம் ஆனது.

அது சம்பந்தமான பழைய நினைவுகளை நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற மார்க் ஆண்டனி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தான் ஒரு நல்ல நடிகனாவதற்காகப் பல வருடங்கள் போராடியது பற்றியும், மீண்டு வந்த தனது திரைப்பயணம் குறித்தும் உருக்கமாகவும், நெகிழ்ச்சியுடனும் பேசியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

“வசூல், பாராட்டுகள், நல்ல விமர்சனங்களை எல்லாம் தாண்டி இப்படம் ‘எல்லோரையும் கவலைகளை மறந்து மனசு விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறது’ என்பதுதான் எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

sj surya says vishal

விஷால் சார் உங்களிடம் ஒரு வேண்டுகோள். நாம் இருவரும் சேர்ந்து இனி இரண்டு படங்கள் பண்ணலாம், இல்லை 20 படங்கள்கூட பண்ணலாம். ஆனால், நமக்குள் இருக்கும் இந்த அன்பான உறவு எப்போதும் இருக்க வேண்டும். பலரும் பேசும் அவதூறான பேச்சுகளால் நம்முடைய இந்த உணர்வும், உறவும் மிஸ் ஆகிவிடக்கூடாது என்று உங்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இவ்வளவு பெரிய ஸ்கீரின் ஸ்பேஸ் தந்த உங்களின் பரந்த அன்பான மனதைப் பார்க்கும் போது ‘இவன்தான்டா ஹீரோ…’ என்று சொல்லத் தோன்றுகிறது” என்றவர்

தன்னுடைய கடந்த கால திரைப் பயணம் குறித்து பேசுகிறபோது “ஒரு நல்ல நடிகனாக வேண்டும் என்று ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த போதிலிருந்து பல வருடமாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். நான் ஹீரோவாக நடித்த திரைப்படங்களான ‘நியூ’ 2004-லும், ‘அன்பே ஆருயிரே’ 2005-லும் வெளியானது. இரண்டு படங்களும் அடிச்சுப் பட்டையக் கிளப்பின. அன்றைக்கு டாப் ஸ்டார்களாக இருந்தவர்களின் படம் கோயம்புத்தூரில் 1.4 கோடி ரூபாய்க்கு விற்றது என்றால், என்னுடைய ‘அன்பே ஆருயிரே’ படம் 1 கோடி ரூபாய்க்கு விற்றது. டாப்பில் இருந்தேன்.ஆனால், கடவுள் மேலே போய் என்னை உட்கார வைத்துவிட்டு, அப்படியே கண்ணைப் புடிங்கியது போல கீழே இறக்கிவிட்டார். அதன்பிறகு பல வருடங்கள் காணாமல் போனேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு `இசை’, `இறைவி’ என மீண்டு வந்தேன். `இறைவி’ திரைப்படத்திலிருந்து என் வாழ்க்கை மறுபடியும் ஆரம்பித்தது. கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி.

அதைத் தொடர்ந்து பல பெரிய இயக்குநர்கள் படத்தில் நடித்து ‘மாநாடு’ படம் வரை வந்தேன். இப்போது இந்த ‘மார்க் ஆண்டனி’ வரை வந்துள்ளேன்.’என்னை மிகவும் ரசித்த மக்கள் மனதில் மீண்டும் எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்காதா’ என நான் அடிக்கடி கடவுளிடம் கேட்பேன். இந்த ‘மார்க் ஆண்டனி’ படம் மூலம் அது நடந்துள்ளது. நான் விட்ட இடத்தில் 70% இடத்தைப் பிடித்துவிட்டேன். அதைத் தவறவிடாமல் சரியாகப் பயன்படுத்தி இன்னும் கடுமையாக உழைத்து உங்களை மகிழ்ச்சியடைச் செய்வேன். நீங்கள் மகிழ்ச்சியடைவதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைவேன்.

இராமானுஜம்

“சுப்மன் கில் அடுத்த விராட் கோலியாக வர விரும்புகிறார்” – ரெய்னா

குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *