நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்துக்கான ஃபஸ்ர்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று (அக்டோபர் 5) வெளியிட்டது.
நடிகர் விஷால், ’லத்தி’ படத்திற்குப் பிறகு ’மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஷாலுக்கு 33வது படமாக அமைந்திருக்கிறது.
’த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை மினி ஸ்டியோ நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரீது வர்மா நடிக்கிறார். சுனில் வர்மா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விஷாலின் ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் விஷால் நடிக்கிறார். மேலும் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவருமே இரட்டை வேடத்தில் நடிக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கதாநாயகனாக நடிக்கும் விஷாலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று விஷாலின் 45 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. பெரிய மீசை மற்றும் தாடியுடன் கையில் துப்பாக்கி ஏந்திய தோற்றத்தில் விஷால் இருந்தார்.
இந்நிலையில் ’மார்க் ஆண்டனி’ படத்தில் ஜாக்கி பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு இன்று (அக்டோபர் 5) வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் எஸ்.ஜே.சூர்யா கையில் துப்பாக்கியுடன் 80களில் பிரபலமான பெல்ஸ் பேண்ட் அணிந்துகொண்டு ரெட்ரோ லுக்கில் உள்ளார்.
இந்த போஸ்டரை எஸ்.ஜே.சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மோனிஷா
வாட்ஸ் அப்பில் இனி ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது: புதிய அப்டேட்!
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எத்தனை அம்பயர்?