நடிகர் சிவகார்த்திகேயனும் இசையமைப்பாளர் டி.இமானும் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். இவர்களது கூட்டணியில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான “நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படம் தான் சிவகார்த்திகேயனும் டி.இமானும் இணைந்து பணியாற்றிய கடைசி படம். அந்தப் படத்திற்குப் பிறகு இவர்கள் இருவருக்கிடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது, அதனால் இனி இவர்கள் இணைந்து பணியாற்ற மாட்டார்கள் என்று சில தகவல்கள் வெளியாகியது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த இசையமைப்பாளர் டி. இமான், இனி இந்த ஜென்மத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் அவர் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம் என்று வெளிப்படையாக குற்றச்சாட்டு முன்வைத்தார்.
டி.இமானின் இந்த குற்றச்சாட்டு சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டி. இமானின் இந்த குற்றச்சாட்டு குறித்து அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
மோனிகா ரிச்சர்ட் கூறியதாவது, சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. எனக்கும் இமானுக்கும் விவாகரத்து நடக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சிவகார்த்திகேயன் பல முயற்சிகளை முன்னெடுத்தார்.
இமானின் இந்த விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் ஆதரவு தரவில்லை. அதனால் இமானுக்கு சிவகார்த்திகேயனை பிடிக்கவில்லை.
என்னை விவாகரத்து செய்வதற்கு, ஒரு வருடத்திற்கு முன்பே வேறு பெண்ணை பார்த்து வைத்துவிட்டு தான் இமான் என்னை விவாகரத்து செய்தார். நான் விவாகரத்துக்கு ஒத்துக் கொள்ளாததால் சில அரசியல்வாதிகளை வைத்து “உங்க அப்பாவைக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டி 46 நாட்களிலேயே விவாகரத்து வாங்கினார். இப்போது இமானுக்கு பட வாய்ப்புகள் சரியாக கிடைப்பதில்லை. அதனால் தான் இப்படி எல்லாம் பேசி புதிய பட வாய்ப்புகளை வாங்க நினைக்கிறார் என்று டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் கூறியிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
லியோ LCU தான்… உறுதி செய்த உதயநிதி
நேரம் தவறாமை: உலகளவில் முதலிடம் பிடித்த தென்னிந்தியா விமான நிலையம்!