”உண்மை சம்பவம்” : SK 21 படத்தின் கதை இதுதானா?

சினிமா

ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து வரும் படம் SK 21. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.

சோனி பிக்ஸர்ஸுடன் இணைந்து கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்து வரும் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, வருகின்ற பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் சிவகார்த்திகேயன் நல்ல உடற்கட்டுடன் இராணுவ வீரர் தோற்றத்தில் மிரள வைக்கிறார்.

மேலும் அவரது தோற்றமும் இராணுவ வீரரை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் கதை இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு உடற்பயிற்சி அளித்த அவரது டிரெய்னர் சந்தீப் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” இது இராணுவத்தை பின்னணியாகக் கொண்ட பயோபிக் கதை தான். எங்களுக்கு 3 மாதம் தான் அவகாசம் கிடைத்தது.

அதற்குள் சிவகார்த்திகேயன் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு இராணுவ வீரரின் தோற்றத்தை கொண்டு வந்தார். ஆரம்பத்தில் நிறைய கஷ்டப்பட்டாலும் பின்னர் தன்னை வெகுவாக மாற்றிக்கொண்டார்.

அதேபோல உணவு விஷயத்திலும் அவர் மிகுந்த கட்டுப்பாட்டினை கடைபிடித்தார். நீங்கள் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்க்கலாம்,” என தெரிவித்து இருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘போர் கொண்ட சிங்கம்’, ‘அமரன்’, ‘சோல்ஜர்’ என 3 தலைப்புகள் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும் இதில் ஒன்று இறுதி செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமலாக்கத்துறை வழக்கில் ஆவணங்கள் திருத்தம்: செந்தில் பாலாஜி தரப்பு வாதம்!

அமலாக்கத்துறை வழக்கில் ஆவணங்கள் திருத்தம்: செந்தில் பாலாஜி தரப்பு வாதம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *