சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட படம்?

Published On:

| By Manjula

sivakarthikeyan singa padhai movie

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருந்த படமொன்று கைவிடப்பட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக குறுகிய காலத்திலேயே உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். தற்போது அவரது நடிப்பில் ‘SK 21’, ‘SK 23’ படங்கள் உருவாகி வருகின்றன. அவரது 24-வது படத்தினை ‘டான்’ சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த ‘சிங்கப்பாதை’ திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

sivakarthikeyan singa padhai movie

அட்லியின் உதவி இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் ‘சிங்கப்பாதை’ உருவாகுவதாகவும், கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தினை தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

டி.இமான் இசையமைக்க இருந்த இப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்றும், கிராமத்து பின்னணியை அடிப்படையாக கொண்டு படத்தின் கதையை அசோக் எழுதி இருந்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் ‘சிங்கப்பாதை’ மிகுந்த எதிர்பார்ப்பினை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. தற்போது இப்படம்  கைவிடப்பட்டது அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து ‘சிங்கப்பாதை’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அல்லது ஹிப்ஹாப் ஆதி இருவரில் ஒருவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

GOAT: தளபதி விஜய்க்கு ‘வில்லன்’ இவர்தான்?

ஆளுநர் பிரச்சாரப் பயணம் எப்போ? அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share