வெளியானது அயலான் ட்ரெய்லர்… 5 வருடங்கள் தாமதத்திற்கு காரணம் என்ன?

சினிமா

இன்று நேற்று நாளை புகழ் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள Sci-Fi திரைப்படம் அயலான்.

ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தினை,  KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், கோதண்டம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

VFX- ல் உருவாக்கப்பட ஒரு ஏலியன் கதாபாத்திரம் இந்த படம் முழுக்க இடம்பெற்றுள்ளது. அந்த ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் படத்தில் மொத்தமாக 4500 VFX காட்சிகள் உள்ளதாம். அதனால் தான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைக்கான கால அவகாசம் இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் அயலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்திலிருந்து ‘அயலா அயலா’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சில தினங்களுக்கு முன் அயலான் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

வரும் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜனவரி 5) அயலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

ஒரு மிஷனுக்காக பூமிக்கு வரும் ஏலியன், சிவகார்த்திகேயனின் உதவியுடன் வில்லனை எதிர்த்து, தனது மிஷனை வெற்றிகரமாக முடிகிறதா? இல்லையா? என்பதே அயலான் படத்தின் ஒன் லைன் கதை.

காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்து விதமான எமோஷன்களும் அயலான் படத்தில் இருப்பது ட்ரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது.

ஒரு பிரம்மாண்டமான sci fi கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் அயலான் படமாக உருவாகி இருக்கிறது.

முழு படத்தையும் காண ஜனவரி 12 ஆம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டும். தற்போது அயலான் ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-கார்த்திக் ராஜ் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மௌன குரு இயக்குநரின் அடுத்த படம் : “ரசவாதி” டீசர் ரிலீஸ்!

டி20 உலகக்கோப்பை தொடர் அட்டவணை: இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போது?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *