ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார் மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.
சோனி பிக்ஸர்ஸுடன் இணைந்து கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்து வரும் இப்படத்தின் டைட்டில் டீசரானது, கடந்த பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக்கொண்டு உருவாகி வரும் இப்படத்தில், இராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இன்னும் 10% படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது.
இந்தநிலையில் ‘அமரன்’ படத்தின் ஓடிடி உரிமையினை பிரபல ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸ் கைப்பற்றி இருக்கிறது. அந்நிறுவனம் சுமார் 6௦ கோடி ரூபாயை கொடுத்து இப்படத்தின் உரிமையை வாங்கி இருக்கிறதாம்.
இதன் மூலம் சிவகார்த்திகேயன் திரை வரலாற்றிலேயே ஓடிடி தளத்தில் பெரும்தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படம் என்னும் பெருமை ‘அமரனுக்கு’ கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் கோடை விடுமுறையில் ‘அமரன்’ படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் ‘SK 23’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு செங்கல்பட்டு சுற்று வட்டாரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Shivaratri 2024: சிவராத்திரி, வாரயிறுதி விடுமுறை…136௦ சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
IPL 2024: சென்னை தொடங்கி குஜராத் வரை… பயிற்சியாளர்களின் சம்பளம் இதுதான்!