நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் புகைப்படத்தை “நீ நடந்தால் நடை அழகு” என்ற பதிவுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அப்போது, ”18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி” என்று கூறியிருந்தார்.
மேலும், அந்த குழந்தைக்கு தன்னுடைய தந்தையின் பெயரையும் சேர்ந்து குகன் தாஸ் என்று பெயரிட்டிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், இன்று(ஜூன் 19) தனது மகனின் ஸ்டைலான புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ”நீ நடந்தால் நடையழகு” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
’சமோசா சாப்பிட்டால் ரூ.71 ஆயிரம்’: ஆனா ஒரு கண்டிஷன்!
சென்னை மழை… ’மக்களுக்கு பாதிப்பு இல்லை’- அமைச்சர் சேகர் பாபு