அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன். சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் இறுதியில் வெளியானது. படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியிருக்கும் நிலையில் இன்னும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது அமரன்.
தற்போது வரை சுமார் 300 கோடி வசூல் செய்திருக்கிறது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அமரன் படக்குழு சந்தித்தது.
சிவகார்த்திகேயன், மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் உள்ளிட்டோர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த நிலையில் அவர் படக்குழுவினருக்கு வாழ்த்து கூறினார்.
ராணுவ மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை மையமாக வைத்து அமரன் எடுக்கப்பட்டதால் தேசப்பற்றோடும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த படம் இருப்பதால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக ராஜ்கமல் நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 30) அமரன் படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது.
வரும் டிசம்பர் 5ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று ராஜ்கமல் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டைரக்டர் ‘கட் ‘சொன்ன பின்னரும் அந்த நடிகர் முத்தம் கொடுத்து கொண்டே இருந்தார் – புலம்பிய நடிகை!
இத இப்பதான் செய்யனுமா? : அப்டேட் குமாரு