விஜயகாந்த் படத்திற்கு மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்

Published On:

| By Selvam

sivakarthikeyan respects vijayakanth

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (ஜனவரி 6) மரியாதை செலுத்தினார்.

கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். இதனை தொடர்ந்து டிசம்பர் 29-ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் இறுதிச்சடங்கின் போது, அஞ்சலி செலுத்த இயலாத திரைப்பிரபலங்கள் தொடர்ச்சியாக விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, குக்கு வித் கோமாளி புகழ் ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

அந்தவகையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று அவரது மனைவி ஆர்த்தியுடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று பிரேமலதா விஜயகாந்த்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் விஜயகாந்த் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதேபோல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், ஆதி, அவரது மனைவி நிக்கி கல்ராணி ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக இளைஞரணி மாநாடு தேதி அறிவிப்பு!

ED அதிகாரிகள் மீது தாக்குதல்: திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share