நடிகர் சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் குரங்கு பெடல்.
இந்த படத்தின் டீசர், புரோமோ, ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை படக் குழு வெளியிட்டுள்ளது.
“விளையாட்டு உடல் நலத்தை காக்கும், விளையாட்டு கொண்டாட்டத்தை தரும், விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது, விளையாட்டு பீரியடை கணக்கு பீரியடுக்கு மாற்றி தருவது ஒரு மனிதத் தன்மையற்ற செயல்” என,
90ஸ் கிட்ஸ்களை கவரும் வகையில் டிரைலரின் தொடக்கத்திலேயே இந்த வார்னிங் கார்டு போட்டு தொடங்கி இருக்கிறார் இயக்குநர்.
பள்ளியில் கோடை விடுமுறை அறிவித்ததால் தங்களது கிராமத்தில் ஓடி திரிந்து கொண்டாட்டமாக விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை மையமாக வைத்து ஆரம்பமாகும் இந்த படத்தில்,
நடிகர் காளி வெங்கட்டும் அவரது மகனாக நடித்துள்ள சிறுவன் சந்தோஷ் வேல்முருகனும் தான் முதன்மை கதாபாத்திரங்கள்.
காளி வெங்கட்டுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாத காரணத்தினால் எங்கு சென்றாலும் நடந்து செல்கிறார். இதனால் அவரை ஊர் மக்கள் கிண்டல் செய்ய அவரது மகன் எப்படியாவது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று பல முயற்சிகளை முன்னெடுக்கிறார்.
தனது நண்பர்கள் முன் எப்படியாவது சைக்கிளை ஓட்டி காட்டிட வேண்டும் என்று தினமும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள தொடங்கும் சிறுவன் அந்த சைக்கிளுக்காக வீட்டில் பணம் திருடுவது, சூதாட்டம் விளையாடுவது, கோழி முட்டையை விற்பது என பல சேட்டைகளை செய்கிறார்.
இறுதியில் அந்த சிறுவன் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டானா? இல்லையா? என்பதே குரங்கு பெடல் கதை.
இந்த படத்தில் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், குணசேகர், ரத்தீஷ், சாய் கணேஷ், காளி வெங்கட், பிரசன்னா பாலச்சந்தர், ஜென்சன் திவாகர் என பலர் நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சவிதா சண்முகம் மற்றும் SuMee பாஸ்கரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
கோடை விடுமுறையினை குதூகலமாய் கொண்டாடிய கடைசி தலைமுறையின் உணர்வுக் குவியலாய் இதோ இந்த #குரங்குபெடல் டிரெய்லர்- https://t.co/3aYQRxTpla
மே3 முதல் திரையரங்குகளில் 😊👍#KuranguPedalFromMay3 #SUMMERகொண்டாட்டம்@KalaiArasu_ @SKProdOffl @sukameekannan @GhibranVaibodha @kaaliactor…
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 29, 2024
இந்த படத்தின் டிரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நடிகர் சிவகார்த்திகேயன்,
“கோடை விடுமுறையினை குதூகலமாய் கொண்டாடிய கடைசி தலைமுறையின் உணர்வுக் குவியலாய் இதோ இந்த குரங்கு பெடல் டிரைலர்” என்று பதிவிட்டுள்ளார்.
வரும் மே 3 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ‘நடக்கணுமே…’ என்று நடக்காதீர்கள்!
பியூட்டி டிப்ஸ்: போலி தயாரிப்புகள்… கண்டுபிடிப்பது எப்படி?