நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று (மார்ச் 10) வெளியானது.
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மூலமாக கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார்.
தான் தயாரிக்கும் படங்கள் மூலமாகப் புதுமுகங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இவரது தயாரிப்பில் இறுதியாக டான் படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகியிருந்தது. ஆனால் இதனை சிவகார்த்திகேயன் ஃபர்ஸ்ட் காபி முறையில் தயாரித்த பின்னர் லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் டான் படத்தைத் வெளியிட்டது.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படம் தயாரிக்க உள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு இன்று (மார்ச் 10) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.
விடுதலை படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி நடிக்கவிருக்கும் படத்திற்கு “கொட்டுக்காளி” என்று பெயரிடப்பட்டு ஃபஸ்ர்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கூழாங்கல் திரைப்படத்தின் இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் மற்றும் மலையாள நடிகை அன்னா பென் நடிக்கவுள்ளனர். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனி வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்!