சிவகார்த்திகேயனை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

Published On:

| By Kavi

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் உருவாக உள்ளது.

தமிழ் சினிமா இயக்குநர்களில் ஷங்கருக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் 2020 ஜனவரியில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தர்பார்.

அதற்குப் பின் இன்று வரை அவரது இயக்கத்தில் படம் தயாரிக்கப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இடையில் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கைவிட்டுப்போனது. தெலுங்கு மற்றும் இந்தியில் படங்கள் இயக்கப்போகிறார் என்றும் அது சம்பந்தமான வேலைகள் நடக்கின்றன என்றும் சொல்லப்பட்டது. அதுவும் அரங்கேறியதாக இல்லை.

இந்நிலையில் இப்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தின் தயாரிப்பில் பங்குபெற்று உதவியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த நன்றிக் கடனுக்காக முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தைத் தயாரித்த பி.மது தயாரிப்பில் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளார். அப்படத்துக்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன.

முதல்கட்டமாக அந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, ரஜினியின் தர்பார் ஆகிய படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் அனிருத் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

சி.வி.சண்முகம் அளித்த புகார்: தேர்தல் அலுவலர் சொன்ன சுவாரஸ்யம்!

நீட் விலக்கு: தமிழக அரசின் புதிய மனு மீது விரைவில் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share