சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கப்போவது யார்?

Published On:

| By Selvam

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 அன்று வெளியாகவுள்ளது.

அதைத் தொடர்ந்து, ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம்  நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கான பூர்வாங்க வேலைகளை தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக நாயகி தேர்வு நடந்துகொண்டிருக்கிறது.

sivakarthikeyan movie actress

தமிழில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமாக உள்ள பூஜாஹெக்டே அல்லது பன்மொழிகளில் வெளியான சீதாராமம் படத்தின் மூலம் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு  அறிமுகமான மிருணாள்தாகூரை கதாநாயகியாக பேசலாம்  என இயக்குநர் மற்றும் கதாநாயகன் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது

sivakarthikeyan movie actress

படப்பிடிப்பு தொடங்கும்போது இருவரில் எவருடைய தேதிகள் ஒத்துப்போகிறதோ அந்த நடிகையை ஒப்பந்தம் செய்யலாம் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளதாம். காரணம் பூஜா ஹெக்டேக்கு சிவகார்த்திகேயன் சிபாரிசும், இயக்குநரின் தேர்வு மிருணாள் தாகூர் என இருப்பதால் இருவரது விருப்பத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவை தயாரிப்பு தரப்பு கூறியதை நாயகனும், இயக்குநரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இராமானுஜம்

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது!

விஜய்க்கு அன்புமணியின் அன்பான வேண்டுகோள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel