புயல் பாதிப்பு: நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்

சினிமா

மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தன்னார்வலர்கள் தானாக முன்வந்து உதவிகள் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்களும் மக்களுக்கு உதவ தங்களால் முடிந்த தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார்கள். இவர்களை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார்.

இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கனடா: வேலைவாய்ப்புகள் இன்றி இந்திய பட்டதாரிகள் தவிப்பு!

பியூட்டி டிப்ஸ்: எண்ணெய் வைத்து தலைக்குக் குளிப்பது சரியா?

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *