கனா, வாழ், டாக்டர், டான், கொட்டுக்காளி போன்ற வெற்றி படங்களை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சமீபத்தில் குரங்கு பெடல் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது.
இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் வெளியான குரங்கு பெடல் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இந்த படத்தில் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், குணசேகர், ரத்தீஷ், சாய் கணேஷ், காளி வெங்கட், பிரசன்னா பாலச்சந்தர், ஜென்சன் திவாகர் என பலர் நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஒரு சிறுவனின் சைக்கிள் ஆசை அவனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்த இந்த படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது.
குரங்கு பெடல் திரைப்படத்திற்கு தியேட்டரில் ஒரு நல்ல தொடக்கம் கிடைத்திருந்தாலும் அரண்மனை 4, ஸ்டார், இங்க நான் தான் கிங்கு, என அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து வெளியானதால் குரங்கு பெடல் படத்திற்கான வரவேற்பு தியேட்டரில் சுமாராகவே இருந்தது.
அதன் பிறகு குரங்கு பெடல் திரைப்படம் எப்போது ஓடிடியில் வரும்? எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும்? என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
குரங்கு பெடல் திரைப்படம் அஹா ஓடிடி தளத்தில் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் ஜூன் 14ஆம் தேதி குரங்கு பெடல் திரைப்படம் அஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. ஆனால் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தேர்தல்… ஜெயிக்கப்போவது யார்? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!
ஹெல்த் டிப்ஸ்: உங்கள் உணவு பழக்கம் எப்படிப்பட்டது?
வேலைவாய்ப்பு : இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணி!
பியூட்டி டிப்ஸ்: முக இறுக்கத்துக்கு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவரா நீங்கள்?