மிஷ்கின் இயக்கிய பிசாசு – 2 படம் முடிந்துவிட்டாலும் அந்தப்படம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை.
மிஷ்கின் இயக்கப்போகும் புதிய படம் பற்றிய தகவல்களும் இல்லாத நிலையில் பிற இயக்குநர்கள் இயக்கும் படங்களில் அவர் நடித்து வருகிறார். விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள மிஷ்கின் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “சிவகார்த்திகேயனை முதலில் பார்த்தபோதே ‘நீ பெருசா சாதிக்கணும்’ என்று சொன்னேன். இப்போது அவர் சாதித்துவிட்டார். நடிகை சரிதா என்னிடம், ‘சிவகார்த்திகேயன் ரஜினியைப் போல அடக்கமானவர்’என கூறுவார்.
நான் சொல்கிறேன். சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்லை… ரஜினியே தான்” என்றார்.
தான் நடிக்கும் படங்களின் கதாநாயகர்களை பற்றி வானளவு புகழ்ந்து பேசுவது வழக்கம். லியோ படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்று திரும்பிய மிஷ்கின் நடிகர் விஜய் பற்றி புகழ்ந்து பேசினார். தற்போது மாவீரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக புகழ்ந்தாரா என்பதை கடந்து சிவகார்த்திகேயன் குட்டி ரஜினிதான் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
தமிழ் சினிமா நடிகர்களில் ரஜினிகாந்த் அவருக்கு அதிகமாக நடிகர் விஜய் என இருவருக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர் அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.
ரஜினிகாந்த், விஜய் இருவருக்கும் அதிகளவு ரசிகர்கள் கூட்டம் உடனடியாக கிடைத்துவிடவில்லை. நீண்ட போராட்டம், வெற்றிகளை கடந்த பின்னரே கிடைத்தது. ஆனால் சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் குழந்தை முதல் முதியவர்கள் வரையிலான ரசிகர்கள் கூட்டம் உருவானது, அது அப்படியே சினிமாவிலும் தொடர்கிறது என்கின்றனர்.
இராமானுஜம்
பொது சிவில் சட்டம்: மோடிக்கு எடப்பாடி எதிர்ப்பு!
’அதிக உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுக தான்’: எடப்பாடி