Sivakarthikeyan Ayalaan film banned

சிக்கலில் சிவகார்த்திகேயன்… அயலான் படத்திற்கு தடை!

சினிமா

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அயலான். இந்த படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது. Sivakarthikeyan Ayalaan film banned

தற்போது ஒருவழியாக அயலான் படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது திடீரென அயலான் பட ரிலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் அயலான் படத்தை முதலில் தயாரிக்க தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் அதிக பணம் தேவைப்பட்டதால் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ்  நிறுவனத்திடம் ரூ. 10 கோடி கடன் வாங்கியது.

அதன்பின் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தினால் அயலான் படத்தை தொடர்ந்து தயாரிக்க முடியாத சூழ்நிலை உருவானதால் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம், 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து அயலான் படத்தை பெற்றுக் கொண்டது.

மேலும் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ்  நிறுவனத்திடம் வாங்கிய கடனையும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

அந்த கடனில் முதல் தவணையாக ரூ.3 கோடியை செலுத்திய நிலையில் மீதம் இருக்கும் தொகையை தரவில்லை என டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

அந்த வழக்கில், ”தங்களுக்குச் செலுத்த வேண்டிய 14 கோடி 70 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை தராமல், KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் அடுத்தடுத்து படங்களை வெளியிட  திட்டமிட்டுள்ளது.

எங்களுக்கு சேர வேண்டிய தொகையைக் கொடுக்கும் வரை சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படங்களை வெளியிட அனுமதிக்கக் கூடாது” என்று டி.எஸ்.ஆர். நிறுவனம் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

Alambana Official First Look-Teaser-Trailer | Vaibhav | Parvathy Nair | Latest Tamil Cinema Updates - YouTube

இந்த வழக்கை நேற்று (டிசம்பர் 14) விசாரித்த நீதிபதி சரவணன், அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின்  அடுத்த விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

அயலான் படம் பொங்கல் ரிலீஸ் என்பதால் அதற்குள் இந்த பஞ்சாயத்துகள் முடிந்து விட்டால் அயலான் படத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் இன்று ( டிசம்பர் 15) வெளியாகும் இருக்கும் ஆலம்பனா படம் தான் சிக்கலில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

INDvsSA: சூர்யகுமாரின் சூப்பர் சதம்… கடைசி போட்டியில் இந்தியா அபார வெற்றி!

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

காசாவில் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி!

7,000 விமான நிலைய பணியாளர்களுக்கு ஊதியம் நிறுத்தம் : காரணம் என்ன?

Sivakarthikeyan Ayalaan film banned

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0