‘உழவர்களின் தோழன்’… சிவகார்த்திகேயனுக்கு புதிய விருது!

சினிமா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மறைந்த நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரது முயற்சியில் வருடந்தேறும் “தேசிய நெல் திருவிழா” நடத்தப்பட்டு வருகிறது.

திரைப்பட நடிகர் சிவகார்த்தியேன் தனிப்பட்ட முறையில் மருத்துவம், கல்வி, விளையாட்டு சம்பந்தபட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அதே போன்று, நெல் ஜெயராமன் உடல்நிலை மோசமாகி 2018 ஆம் ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் 6 ஆம் தேதி நெல் ஜெயராமன் காலமானார்.

Sivakarthikeyan in National Paddy Festival

அவருக்கான முழு மருத்துவ  செலவையும் அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர் நம்மாழ்வார் – நெல் ஜெயராமன் சம்பந்தமான நிகழ்வுகளில் சிவகார்த்திகேயன் பங்கேற்று வருகிறார்.

இந்தாண்டு ஜூன் 22 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிவகார்த்திகேயனுக்கு ‛உழவர்களின் தோழன்’ விருது வழங்கப்பட்டது.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “மாபெரும் மனிதர் நம்மாழ்வார் அய்யா ஆரம்பித்து வைத்ததை நெல் ஜெயராமன் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி சத்தம் இல்லாமல் ஒரு பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள்.

174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு எடுத்து, அதை அனைவரும் பயிர் செய்கிற மாதிரியான ஒரு சூழ்நிலையை அவங்க ரெண்டு பேரும் ஏற்படுத்தி இருக்காங்க. அவங்களுக்கு என்ன திருப்பி செஞ்சாலும் அது பத்தாதுன்னு நினைக்கிறேன்.

அவங்க ரெண்டு பேரும் விதைத்திருக்கிற இந்த எண்ணம், இந்த திருவிழா எல்லாமே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கானது. மறைந்த நெல் ஜெயராமன் அவர்களுக்கு நான் உதவி செய்ததாக இங்கு குறிப்பிட்டு பேசினார்கள். அது உதவி இல்லை எனது கடமையாக கருதுகிறேன்.

மக்களோடு மக்களாக இருந்த என்னை இப்படி மேடை ஏற்றி அழகு பார்க்கிறீர்கள். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த விருதை கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.

சில விருது மகிழ்ச்சியை கொடுக்கும், சில விருது சந்தோஷம் கொடுக்கும், சில விருது உங்களுக்கு புகழை கொடுக்கும். அப்படியான விருதாக இதை நான் பார்க்கிறேன். இந்த விருதுக்கு எவ்வளவு தகுதியானவன்னு எல்லாம் எனக்கு தெரியவில்லை.

ஏன்னா ஒரு விவசாயி தன்னை மட்டும் பார்க்காமல் எந்த கஷ்டம் இருந்தாலும் வெளியே சொல்லிக் கொள்ளாமல் உழைக்கிறார். விவசாயி என்ற அந்த வார்த்தையே ரொம்ப பவர்புல்லான ஒரு வார்த்தை.

‛உழவர்களின் தோழன்’ என்ற இந்த விருதை நான் இன்னும் பெரிய பொறுப்பா பாக்குறேன். இதற்காக என்னால் இயன்றதை கடைசி வரைக்கும் ஏதாவது ஒரு வகையில் செய்வேன். நான் நடிக்கும் திரைப்படங்கள் மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள், நெல் திருவிழா ஆகிய தகவல்களை கொண்டு செல்வேன் என்பதை இந்த மேடையில் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

கடந்த முறை இந்த திருவிழாவில் பங்கேற்ற இயக்குனரும் நடிகருமான சசிகுமார், இந்த விழாவை தமிழகத்தின் பல ஊர்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதையே தான் நானும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நெல் திருவிழாவை தமிழகத்தில் பல பகுதிகளில் நடத்த வேண்டும். அங்கும் நான் வந்து கலந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா: சீட் ஸ்நாக்ஸ்

ஜாமீன் நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால்

விஜய்க்கு வாழ்த்து சொன்ன த்ரிஷா… ட்ரெண்டான செல்ஃபி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *