கடந்த 2022ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான காந்தாரா படம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் காந்தாரா படத்தையும் தயாரித்திருந்தது.
வெறும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட காந்தாரா படம் உலகளவில் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இந்திய திரையுலகையே பிரமிக்க வைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து காந்தாராவின் அடுத்த பாகம் உருவாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
காந்தாரா முதல் பாகத்தின் முன் கதையாக (prequel) காந்தாரா படத்தின் அடுத்த பாகம் உருவாக உள்ளது என்றும் தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து காந்தாரா படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. காந்தாரா படத்தின் முன் கதை என்பதால் அடுத்த பாகத்திற்கு “காந்தாரா : ஏ லெஜன்ட் சாப்டர் 1” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் கதாநாயகி குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி மெகா ஹிட் அடித்த “சப்த சாகரடாச்சே எல்லோ 1 & 2” படத்தில் கதாநாயகியாக நடித்த ருக்மணி வசந்த் தான் காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் SK 23, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் VJS 51 ஆகிய தமிழ் படங்களிலும் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
2022 ஆம் ஆண்டு காந்தாரா படம் வெளியான பிறகு அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சப்தமி கவுடாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
அதேபோல் காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான பிறகு ருக்மணி வசந்துக்கு உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் பணி!
ஷங்கர் முன்னிலையில் ராம்சரண் 16வது படபூஜை… கேம் சேஞ்சர் என்னாச்சு?
குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி!